கோடைக்கு ஏற்ற பழங்கள் : கோடைக்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமா? என்ன பழங்கள் சாப்பிடலாம்?
கோடைக் காலத்தில் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமெனில் நீங்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடவேண்டும். அவை எவ்வாறு உங்களுக்கு உதவுகிறது என்று பாருங்கள்.

இயற்கை சரும பராமரிப்பு ஏன்?
சந்தையில் எண்ணற்ற சரும பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. இதில் பிரிசர்வேடிவ்களும், வேதிப்பொருட்களும் கலக்கப்படுகின்றன. இது உங்கள் சருமத்தை நாசமாக்கும். எனவே இயற்கையான மற்றும் வீட்டிலே செய்யக்கூடிய சரும பராமரிப்பு பொருட்கள் உங்களுக்கு மிகவும் உகந்தவையாகவும், சருமத்தை தொல்லை தராதவையாகவும் இருக்கும். இது உங்கள் அழகையும், பொலிவையும் பாதுகாக்கும். இது உங்களுக்கு பாதுகாப்பானது. எனவே கோடை காலத்தில் சரும வறட்சியைப்போக்க பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி என்ன பழங்களை சாப்பிடலாம் என்று பாருங்கள்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலின் உள்ளது. அன்னாசிப்பழம் சருமம் சிவத்தல் மற்றும் முகப்பரு தழும்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது வீக்கம் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கிறது. அன்னாசிப்பழத்தை அரைத்து தேனில் குழைத்து, உங்கள் சருமம் மற்றும் முகத்திற்கு மாஸ்க் போல் பூசிக்கொள்ளலாம்.
மாம்பழம்
பழங்களின் அரசன் என்றும், முக்கனிகளுள் முதலாவதாகவும் இருப்பது மாம்பழம் ஆகும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சருமத்தில் இயற்கை பொலிவை அதிகரிக்கிறது. இது புறஊதாக்கதிர்கள் சேதப்படுத்திய சருமத்துக்கு பொலிவைத் தருகிறது. இது சருமம் முழுவதுக்கும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொடுக்கிறது. மாம்பழத்தை அரைத்த்து பால் அல்லது தேனில் கலந்து சருமத்தில் பூசலாம். இது உங்கள் சருமத்துக்கு புத்துணர்வைத் தரும் மாஸ்க் ஆகும்.