Summer Drinks : கோடை காலத்தில் உங்கள் உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்கும்! இந்த பானங்களை முயற்சியுங்கள்!
Summer Drink : வெறும் தண்ணீரை பருகுவதைவிட இதுபோன்ற பழச்சாறுகளாக எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு மேலும் நன்மைகளை அளிக்கிறது. எனவே இந்த பானங்களை பருகி உங்கள் கோடையை வென்றிடுங்கள்.
வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும் பானங்கள்
உடலுக்கு ஆற்றலை வழங்கும் இந்த பானங்கள் ஆரோக்கியம் மற்றும் குளிர்ச்சியையும் கொடுக்கிறது. இதன் மூலம் இந்த கோடையை நீங்கள் வெல்லலாம். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த பானங்களை பருகி, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் பராமரித்துக்கொள்ள உதவும்.
எலுமிச்சை பழச்சாறு
எழுமிச்சை பழச்சாறு உங்களை உற்சாகப்படுத்தும் பானம். நல்ல எலுமிச்சையை பிழிந்து, இதில் தண்ணீரை ஊற்றி கலக்க வேண்டும். இதில் கொஞ்சம் உப்பும், சர்க்கரையும் கலந்து பருகவேண்டும். இந்த பானம் உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதுடன், உங்கள் உடலுக்கு வைட்டமின் சியையும் கொடுக்கிறது. இதனால் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பும் கிடைக்கிறது.
மோர்
மோர், புரோபயோட்டின் நிறைந்த ஒரு பானம். இதை குடிப்பதால் உங்கள் குடல் ஆரோக்கியம் பெறும். தயிரை தண்ணீரில் கரைத்து அதில் வறுத்து பொடித்த சீரகம் மற்றும் உப்பு கலந்து பருகினால், அது உங்கள் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இதுவும் செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
இளநீர்
கோடை காலத்தில் மிகவும் முக்கியமான பானம் இளநீர். உங்கள் உடலை குளிரிவிக்கிறது. உடலுக்கு தேவையான மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசிய சத்துக்களை வழங்குகிறது. இளநீரில் இயற்கை சர்க்கரை உள்ளது. இதனால் உடனடியாக அது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. எனவே கோடை காலத்தில் உங்கள் உடலில் தண்ணீர் வற்றும்போது இளநீரை குடிப்பது உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கி உங்களுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.
ஜல்ஜீரா
ஜல்ஜீரா, மல்லித்தழை, சீரகம், புதினா மற்றும் மற்ற மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் உடலை குளிர்விப்பதுடன், உங்கள் செரிமான மண்டலத்தை சீர்செய்கிறது. இதனால் உங்களின் செரிமானம் மேம்படுகிறது. மேலும் இந்த பானம் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
தர்பூசணி பழச்சாறு
தர்பூசணி பழச்சாறை சிறிது குளிர்ந்த நீரில் கலந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்துது பருக வேண்டும். இது உடனியாக உங்கள் உடலை குளிர்விக்கிறது. மேலும் உங்களின் மனம் மற்றும் உடலுக்கு அமைதியைக் கொக்கிறது.
நன்னாரி சர்பத்
நன்னாரி உடலை குளிர்விக்கும் திறன் கொண்ட மற்றொரு இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுப்பொருளாகும். இதை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரில் கலந்து பருகினால் போதும். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும். உங்களின் தாகத்தை கட்டுப்படுத்தும். இதினுடன் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து பருகுவது மிகவும் நல்லது. இதுவும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கிகிறது.
கரும்புச்சாறு
கரும்புச்சாறு, நாம் அடிக்கடி விரும்பி பருகும் பானமாகும். கரும்புச்சாறில் எலுமிச்சை மற்றும் புதினா, இஞ்சி ஆகியவை கலக்கப்படுகிறது. இது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. உங்கள் உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைக்கிறது.
வெள்ளரி பழச்சாறு
கோடைக்காலம் வெள்ளிரி சாறு பருகுவதற்கு மிகவும் ஏற்ற காலம். இதை தண்ணீரில் சிறிது உப்பு கலந்து பருகினால் உடலுக்கு குளிர் காலத்துக்கு தேவையான ஆற்றலையும், நீர்ச்சத்தையும் வழங்கும். அதற்கு வெள்ளரியை தோல் சீவி, நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அடித்து வடிகட்டி, உப்பு கலந்து பருகவேண்டும்.
வெயில் காலத்தில், குறிப்பாக உடலில் இருந்த அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் கோடை காலத்திற்கு உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே மற்ற நாட்களைவிட நாம் அதிகளவு தண்ணீரை கோடை காலத்தில் பருக வேண்டும்.
வெறும் தண்ணீரை பருகுவதைவிட இதுபோன்ற பழச்சாறுகளாக எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு மேலும் நன்மைகளை அளிக்கிறது. எனவே இந்த பானங்களை பருகி உங்கள் கோடையை வென்றிடுங்கள்.
டாபிக்ஸ்