உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயர்கள்! ‘H’ என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவது!
உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஹெச் என்ற ஆங்கில எழுத்தில் உள்ள பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு ஹெச் என் ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்களை வைக்கவேண்டுமா? இதோ இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களை தேர்ந்தெடுப்பது ஒரு மகிழ்ச்சியான பயணம் தான். ஆனால், அர்த்தமுள்ள பெயராகவும் அது இருக்கவேண்டும். ஹெச் என்ற ஆங்கில எழுத்தில் எல்லாம் அத்தனை எளிதாக பெயர்கள் சிக்கிவிடாது. எனவே அந்தப்பெயரை நீங்கள் தேடிச்செல்லவேண்டாம். உங்களுக்காக இங்கு தொகுத்து கொடுக்கிறோம். இந்த பெயர்களுக்கு நேர்மறை எண்ணம் கொண்ட நபர் என்ற அர்த்தம் உள்ளது. இந்தப்பெயர்கள் தனித்துவமிக்கவை. இந்தப்பெயர்கள் அரிதானவை. இதற்கு அன்பு, பலம் போன்ற எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. அவை உங்களின் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஹர்மான்
ஹர்மான் என்றால் பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர்களைக் கொண்ட நபர்களின் குணங்கள் சமமாக இருக்கும். இவர்களின் ஆளுமை ஒற்றுமை மற்றும் உலக நலன் சார்ந்ததாக இருக்கும்.
ஹெட்வி
ஹெட்வி என்றால் அன்பு என்று பொருள். அன்பானவர், நேர்மையானவம் மற்றும் தூய இதயம் கொண்ட நபர் என்பதைக் குறிக்கும். இந்தப்பெயர் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது அன்பு மற்றும் இரக்கம் என்பதை வெளிப்படுத்தும் நபர் என்பதை குறிக்கும் பெயராகும்.
ஹிமாலாயா
ஹிமாலயா என்றால், பனிச்சிகரங்கள் என்று பொருள். இது இந்தியாவில் உள்ள மலைத்தொடரைக் குறிக்கும். இதற்கு பலம், பிரமாண்டம் மற்றும் இயற்கை அழகு ஆகிய அர்த்தங்கள் உள்ளது. பனிபடர்ந்த சிகரங்களைக் கொண்ட இமயமலையைப் போன்றவர்கள் என்று பொருள். உறுதியானவர் போன்ற எண்ணற்ற அர்த்தங்களும் இந்தப் பெயருக்கு உண்டு.
ஹரிணி
ஹரிணி என்றால், அழகிய மான்குட்டி என்று பொருள். இது கருணை, எளிமை, துணிச்சல், பொறுமை, அப்பாவித்தன என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்ட பெயராகும். இந்தப்பெயர் இயற்கை மற்றும் அமைதியுடன் தொடர்புகொண்ட பெயராகும்.
ஹிமானி
ஹிமானி என்றால் தூய்மையான, மதிப்புமிக்க மற்றும் அறிவாற்றல் கொண்ட நபர் என்று பொருள். இந்தப்பெயர் பிரதிபலிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பொன் என்ற பொருளைத் தரும் பெயராகும். இதற்கு நேர்மையான நபர், பொன்னாலான இதயம் கொண்ட நபர் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது.
ஹர்ஷிதா
ஹர்ஷிதா என்றால் மகிழ்ச்சியான நபர், மகிழ்ச்சி, சந்தோஷம் போன்ற அர்த்தங்களைக் கொண்ட பெயராகும். இது ஒளிமயமிக்க ஆன்மா என்ற பொருள். இது உங்களைச் சுற்றி இதமான சூழலை உருவாக்கும் என்ற பொருளைத் தருகிறது.
ஹிமான்ஷி
ஹிமான்ஷி என்றால் பனியின் துளி என்று பொருள். இதற்கு பனிக்கட் என்ற பொருளும் உள்ளது. இது தூய்மையான, அமைதியான, தனிமை என்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப்பெயர் அமைதி, கருணை குணம் கொண்டவர் போன்ற அர்த்தங்களைக் குறிக்கிறது. இது பனியின் அழகு என்ற பொருளைக் கொடுக்கிறது.
ஹிரால்
ஹிரால் என்றால் செல்வம் மற்றும் வளர்ச்சி என்று பொருள். அதிகப்படியான செல்வம் மற்றும் வெற்றி என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப்பெயர் பொன், பொருள், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஒளிமயமான எதிர்காலம் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கிறது.
ஹிரிடே
ஹிரிடே என்றால், இதயம், உணர்வுகள் அதிகம் கொண்ட நபர் என்ற அர்த்தத்தைக் குறிப்பிடுகிறது. இதற்கு உணர்வுகள், அன்பு மற்றும் இரக்கம் என்ற எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. இந்தப் பெயர், ஆழ்ந்த அறிவுகொண்ட நபர் என்பதைக் குறிக்கிறது. இவர்கள் உணர்வு ரீதியாக மற்றவர்களுடன் தொடர்பு கொண்டவர் என்பதைக் குறிக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்