Sugar Cravings : இந்த உணவுகளுக்குள் இப்படி ஒரு தன்மையா? அந்த உணவுகள் தான் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sugar Cravings : இந்த உணவுகளுக்குள் இப்படி ஒரு தன்மையா? அந்த உணவுகள் தான் என்ன?

Sugar Cravings : இந்த உணவுகளுக்குள் இப்படி ஒரு தன்மையா? அந்த உணவுகள் தான் என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 31, 2025 10:13 AM IST

Sugar Cravings : வெள்ளை சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நாளடைவில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதை தடுக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

Sugar Cravings : சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படும் உணவுகள்?
Sugar Cravings : சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படும் உணவுகள்?

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் (70 சதவீதம் கோகோ இருக்கவேண்டும்), அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் இனிப்பும், கசப்பும் கலந்த ஒரு சுவை இருக்கும். அந்த சுவை உங்களின் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்தும். இதனால் நீங்கள் அதிக சர்க்கரையை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இது உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களை சுரக்கச் செய்கிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

பழங்கள்

பெரிகள், மாம்பழம் மற்றும் திராட்சைப் போன்ற ஃபிரஷ்ஷான பழங்களில் இயற்கையில் இனிப்புச் சுவை உள்ளது. இதில் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த நார்ச்சத்துக்கள், உங்களுக்கு சர்க்கரை செரிமானமாவதைத் தாமதப்படுத்துகிறது. இது உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனால் உங்களுக்கு அதிகம் சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை என்று கூறப்படுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது நல்லது. இதில் அதிகளவில் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. உங்களின் இனிப்பு தேவையைக் கட்டுப்படுத்தும் ஒரு நல்ல ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்களுக்கு நீண்ட நேர ஆற்றலையும் கொடுக்கிறது. உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்களுக்கு திடீரென சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தையும் கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சியா ஃபுட்டிங்

சியா விதைகளில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புக்களும் உள்ளது. இதை நீங்கள் தண்ணீரில் ஊறவைக்கும்போது, அது பெருகுகிறது. இதனால் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்குத் தேவையான சர்க்கரையும் கிடைத்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.

இளநீர்

இளநீர் இயற்கை எலக்ட்ரோலைட் உணவாகும். இது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்தாலும் அது பசி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே உங்களுக்கு தேவையற்ற பசி ஏற்படுவதைத்தடுக்க நீங்கள் உங்கள் உடலில் நீர்ச்சத்துக்களை அதிகரித்துக்கொள்ளவேண்டும். எனவே இளநீரும் இதற்கு உதவும் என்று கூறப்படுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்ச், கிரேப் ஃப்ரூட் போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்களும், நார்ச்சத்துக்களும் உள்ளன. இது உங்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்க்ரை அளவைக் குறைக்க உதவும். இது உங்களுக்கு இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற தூண்டுதலைத் தடுக்கும்.

யோகர்ட்

சாதாரண யோகர்ட் உங்கள் உணவில் புரதம் மற்றும் ப்ரோபயோடிக்குகள் கிடைக்கச் செய்யும் முக்கிய உணவாகும். இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குடலை வலுவாக்குவதாகக் கூறப்படுகிறது. அனைத்தும் சமமாக இருக்கும் குடலில்தான், சர்க்கரையை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடத்தூண்டும் விருப்பத்தை குறைக்கும் என்று கூறுப்படுகிறது.

பேரிட்சை பழங்கள்

பேரிட்சை பழங்களில் இயற்கை இனிப்புச்சுவை அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளது. இதன் அதிகப்படியான இனிப்புச்சுவை, உங்களின் பசியைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்காமலே இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

நட்ஸ்கள் மற்றும் விதைகளில் ஆரோக்கிய கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்களும் உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உங்களுக்கு சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் குறைப்பதாகு கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.