சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா : சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? வாயில் வைத்தவுடன் வழுகிக்கொண்டு ஓடும் அல்வா செய்யலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா : சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? வாயில் வைத்தவுடன் வழுகிக்கொண்டு ஓடும் அல்வா செய்யலாமா?

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா : சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? வாயில் வைத்தவுடன் வழுகிக்கொண்டு ஓடும் அல்வா செய்யலாமா?

Priyadarshini R HT Tamil
Updated Mar 10, 2025 09:59 AM IST

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா : சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? அதைவைத்து வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு ஓடும் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா : சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? வாயில் வைத்தவுடன் வழுகிக்கொண்டு ஓடும் அல்வா செய்யலாமா?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா : சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கா? வாயில் வைத்தவுடன் வழுகிக்கொண்டு ஓடும் அல்வா செய்யலாமா?

தேவையான பொருட்கள்

• சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். திப்பித்திப்பியாக இல்லாமல் மையாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதில் வேறு எந்த மாவும் சேர்க்கவேண்டாம்)

• வெல்லம் – ஒரு கப் (வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக்கொள்ளவேண்டும். வெல்லம் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். சுவைக்கு ஏற்ப நீங்கள் அதிகரித்து அல்லது குறைத்து சேர்த்துக்கொள்ளலாம்)

• நெய் – ஒரு கப்

• முந்திரி – ஒரு கைப்பிடியளவு

• உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

1. ஒரு கடாயில் அரைத்த சர்க்கரை வள்ளிகிழங்கு, உப்பு மற்றும் வெல்லப்பாகு சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். இதை அடுப்பில் வைப்பதற்கு முன்னர் நன்றாக பாகையும் கிழங்கையும் கலந்துகொள்ளவேண்டும். தண்ணீர் பதத்துக்கு இரண்டும் இருக்கவேண்டும்.

2. இதை அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கெட்டியாக வரும்போது, கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறவேண்டும். அல்வா நெய் பிரிந்து சுருண்டு வரும் வரை அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

3. ஒரு தாளிப்பு கரண்டியில் முந்திரியை சிறிது நெய் சேர்த்து வறுத்து இந்த அல்வாவில் சேர்க்கவேண்டும். உங்களுக்கு பிடித்த வேறு நட்ஸ்களும் சேர்த்துக்கொள்ளலாம். நட்ஸ்கள் ஆப்ஷன்தான் வேண்டாம் என்றால் விட்டு விடலாம். நன்றாக அனைத்தும் திரண்டு வரும்போது அல்வாவை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.

தற்போது வரும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் சுவை அவ்வளவாக இருப்பதில்லை. எனவே இதுபோல் செய்துகொடுக்கும்போது, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இது பிடிக்கும். இதை நீங்கள் விசேஷ காலங்களில் இறைவனுக்கு படைக்கவும் செய்து கொள்ளலாம். இது ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். 

ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். வெல்லத்துக்கு பதில் இதில் நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். சீசன் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த வகையில் இது சீசனில் கிடைக்கும் பொருளை வைத்து தயாரிக்கப்படும் ஒன்றாகும். இதில் நெய்க்கு பதில் எண்ணெய்விட்டு செய்துகொள்ளலாம். இதை நீங்கள் கிலோ கணக்கில் செய்தால் கூட காலியாகிவிடும். அத்தனை சுவையானதாக இருக்கும்.