அல்சரால் ஆண்டுக்கணக்கில் அவதியா? இந்த ஒரே ஒரு தீர்வு போதும்! நீங்கள் மகிழ்வுடன் வாழலாம்! என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அல்சரால் ஆண்டுக்கணக்கில் அவதியா? இந்த ஒரே ஒரு தீர்வு போதும்! நீங்கள் மகிழ்வுடன் வாழலாம்! என்ன தெரியுமா?

அல்சரால் ஆண்டுக்கணக்கில் அவதியா? இந்த ஒரே ஒரு தீர்வு போதும்! நீங்கள் மகிழ்வுடன் வாழலாம்! என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Oct 25, 2024 01:47 PM IST

அல்சரால் ஆண்டுக்கணக்கில் அவதியா? இந்த ஒரே ஒரு தீர்வு போதும். நீங்கள் மகிழ்வுடன் வாழலாம். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அல்சரால் ஆண்டுக்கணக்கில் அவதியா? இந்த ஒரே ஒரு தீர்வு போதும்! நீங்கள் மகிழ்வுடன் வாழலாம்! என்ன தெரியுமா?
அல்சரால் ஆண்டுக்கணக்கில் அவதியா? இந்த ஒரே ஒரு தீர்வு போதும்! நீங்கள் மகிழ்வுடன் வாழலாம்! என்ன தெரியுமா?

அல்சர்

வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் ஏற்படும் புண்களே அல்சர் என்று அழைக்கப்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இதுவே பொதுவான அறிகுறியாகும்.

கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வருகிறது.

டியோடெனல் அல்சர் என்பது உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது.

அல்சரின் அறிகுறிகள்

வயிறு எரிச்சல்

வயிறு வலி

வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு

கொழுப்பு உணவுகளை ஏற்காமை

நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்

வாந்தி

ரத்த வாந்தி,

கருப்பாக மலம் கழித்தல்,

மூச்சுத்திணறல்

மயக்கம்

சோர்வு

வாந்தி

உடல் எடையிழப்பு

பசியின்மை

பசியில் மாற்றம்

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.

அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.

ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்தவேண்டுமெனில் நீங்கள் வீட்டிலேயே ஆரம்ப காலத்தில் சில எளிய தீர்வுகளை கடைபிடிக்கலாம். அதற்கு உதவுவது சோம்பு. சோம்பு அல்சருக்கு சிறந்த நிவாரணம் தரக்கூடியது.

அல்சருக்கு சோம்பை எப்படி பயன்படுத்தவேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும், அரை ஸ்பூன் சோம்பு எடுத்து அதை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். மென்றுதான் சாப்பிட வேண்டும். விழுங்கிவிடக்கூடாது. இதனால் தான் கடைகளில் உணவு உண்ட பின் சோம்பு கொடுக்கிறார்கள் அல்லது ஒரு வெற்றிலையில் ரோஜா குல்கந்து, சோம்பு வைத்தும் மென்று சாப்பிடலாம். அது நீங்கள் வயிறு அதிக கனமாக இருப்பதாக உணர்ந்தால், இதைச் செய்யலாம் அல்லது சோம்பை மட்டும் மென்று சாப்பிடுவதே போதுமானது. ஒரு சிலருக்கு சோம்பை மென்று சாப்பிடுவது பிடிக்காது என்பதால், அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதித்து, அந்த தண்ணீர் அரை டம்ளராக வற்றியபின், அதை வடிகட்டி பருகலாம். இதை தொடர்ந்து செய்துவர பலன் உறுதி.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.