முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதியா? இதோ வீட்டிலே என்ன செய்யலாம் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதியா? இதோ வீட்டிலே என்ன செய்யலாம் பாருங்கள்!

முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதியா? இதோ வீட்டிலே என்ன செய்யலாம் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 09, 2024 06:03 AM IST

முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதியா? இதோ வீட்டிலே என்ன செய்யலாம் பாருங்கள். உங்கள் முகப்பொலிவுக்கு வழிகாட்டும் இயற்கை கிரீம்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதியா? இதோ வீட்டிலே என்ன செய்யலாம் பாருங்கள்!
முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளால் அவதியா? இதோ வீட்டிலே என்ன செய்யலாம் பாருங்கள்!

கரும்புள்ளிகளை வெளிரச்செய்யும் இயற்கை சீரம்

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை பழத்தின் சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு குட்டி பவுலில் கற்றாழை ஜெல், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை பழத்தின் சாறு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அதை முகத்தில் தடவவேண்டும். கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் நேரடியாக தடவவேண்டும். இதை அரை மணி நேரம் காயவிடவேண்டும். இளஞ்சூடான தண்ணீரில் முகத்தை கழுவவேண்டும். நன்றாக காயவிட்டு பாத்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைந்திருக்கும்.

கற்றாழை ஜெல் இதமளிக்கும், குணமளிக்கும் திறன்களுக்கு பெயர்போனது. மஞ்சள் தூளில் உள்ள வீக்கத்துக்கு எதிரான மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் கரும்புள்ளிகளை வெளிரச் செய்யும் தன்மை கொண்டவை.

சருமத்துக்கு எலுமிச்சை சாறு பொலிவைத்தருகிறது. இதில் இயற்கை பிளீச்சிங் குணங்கள் உள்ளது.

ரோஸ் வாட்டர் மிஸ்ட்

தேவையான பொருட்கள்

டிஸ்டில்ட் தண்ணீர் – ஒரு கப்

காய்ந்த ரோஜா இதழ்கள் அல்லது ஃபிரஷ் ரோஜா இதழ்கள் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

டிஸ்டில்ட் தண்ணீரை கொதிக்கவைத்து, அதை இறக்கி அதில் ரோஜா இதழ்களை சேர்க்கவேண்டும். இதை அரை மணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும். வடிகட்டி, ஆறவைத்து, முகத்தில் ஸ்பிரே செய்துகொள்ளவேண்டும்.

ரோஜா இதழ்கள் உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தைக்கொடுப்பவை.

இதுபோன்ற இயற்கை தீர்வுகளை ஒவ்வொன்றாக வாரத்தில் 3 நாள் செய்யவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய உட்பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை உங்கள் சருமம் ஏற்றுக்கொள்கிறதா என்பதை பாருங்கள். அப்போதுதான் அலர்ஜியை தவிர்க்க முடியும்.

சரும பராமரிப்புக்கு, அதிகளவு தண்ணீர் பருகவேண்டும். சரிவிகித உணவு உட்கொள்ளவேண்டும். தினமும் சன்ஸ்கிரினை பயன்படுத்தி உங்கள் சருமத்தை புறஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாத்துக்ககொள்ளுங்கள். இந்த கதிர்கள்தான் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்பட காரணமாகின்றன.

உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களைப் போக்க இயற்கை வழிகளே சிறந்தது. இதை உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உங்கள் சருமம் மேலும் பொலிவு பெற உதவும். நீங்கள் பொலிவான சருமத்தைப் பெறவேண்டுமெனில் பொறுமையும், ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவதும் அவசியம். அதுவே உங்களுக்கு சிறந்த பலனைத்தரும்.