Suck Your Belly Fat : தொப்பை தொல்லையா இருக்கா? இந்த பானம் எந்த வகையில் உதவும்?
Suck Your Belly Fat : தொப்பையில் உள்ள கொழுப்பை உறிஞ்ச வேண்டும் என்றாலும், ஒரு வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கவும் வேண்டுமா- இதோ காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த ஒரு ஸ்மூத்தி போதும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.
ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 2 ஸ்பூன்
சியா விதைகள் – ஒரு ஸ்பூன்
ஆப்பிள் – 1
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பட்டைப்பொடி – கால் ஸ்பூன்
செய்முறை
ஓட்ஸ் மற்றும் சியா விதைகளை 2 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய ஆப்பிள் பழங்கள், ஊறவைத்த ஓட்ஸ், சியா விதைகள், எலுமிச்சை சாறு, பட்டைப்பொடி என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பானத்தை அப்படியே காலையில் வெறும் வயிற்றில் பருகினால், உங்கள் உடல் எடையில் ஏற்படும் மாற்றத்தை, உங்களால் உணர முடியும்.
நீங்கள் உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய உணவுகள் உட்கொள்வது, போதிய உறக்கம் என முறையான வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றவேண்டும். உங்கள் தொப்பை கரைவதை உங்கள் கண்ணால் பார்க்கலாம். அது மட்டுமின்றி உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும் அகற்ற இந்த ஸ்மூத்தி உதவும்.
இதை நீங்கள் முயற்சி செய்வதற்கு முன்னரும், பின்னரும், தொப்பையின் அளவு மற்றும் உடல் எடை ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட இங்கு கொடுக்கப்படும் ரெசிபிக்களை முயற்சித்து பலன் பெறுங்கள். மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்