Success in Life : வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Success In Life : வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!

Success in Life : வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 05:16 PM IST

Success in Life : வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!

Success in Life : வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!
Success in Life : வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்!

தள்ளிப்போடுதல்

வாழ்வில் தோற்றவர்கள் எல்லாம் தங்களின் வேலைகளை தள்ளிப்போடுவார்கள். அவர்களின் பொன்னான நேரத்தை தள்ளிப்போடுவதில் செலவிடுவார்கள். அவர்களின் இலக்குகளை நோக்கி பயணிக்க மாட்டார்கள். இதனால்தான் அவர்கள் மற்றவர்களைவிட அதிகம் பின்தங்குகிறார்கள்.

இலக்குகளை நிர்ணயிப்பதில் பின்னோக்கியிருத்தல்

வாழ்வில் தோற்றவர்களுக்கு தெளிவான இலக்குகள் இருக்காது. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. அவர்களுக்கான சாதனை பட்டியல் என்பது காலியாகவே இருக்கும். இதனால் அவர்கள் வாழ்வின் மீது கவனம் செலுத்த மாட்டார்கள். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்வார்கள்.

அவர்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள்

வாழ்வில் தோல்வியடைந்தவர்களுக்கு உத்வேகம் இருக்காது. அவர்களை முன்னேற்றிக்கொள்ள அவர்கள் எந்த வேலையையுமே செய்யமாட்டார்கள். இதுவும் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு விஷயமாகும்.

தன்னம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள் மற்றும் வாழ்வில் ரிஸ்க் எடுக் மாட்டார்கள்

வாழ்வில் தோற்றவர்களிடம் தன்னம்பிக்கை இருக்காது. அவர்கள் எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஓடி ஒளிந்துகொள்ளும் நபர்களாக இருப்பார்கள். இது வாழ்வில் அவர்களின் வளர்ச்சியை தடை செய்யும் ஒன்றாக இருக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும்

இனம் இனத்தோடு தான் சேரும் என்ற பழமொழிக்கு ஏற்ப, வாழ்வில் தோல்வியடைந்தவர்கள், மற்றொரு தோல்வியடைந்தவர்களுடன்தான் நட்பில் இருப்பார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும். இது அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் குலைக்கும். இதனால், அவர்கள், அவர்களின் வேலையை செய்யமாட்டார்கள்.

தோல்வியாளர்கள் தீர்வுகளை பார்க்கமாட்டார்கள்; பிரச்னைகளை மட்டும்தான் பார்ப்பார்கள்

இவர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருக்க மாட்டார்கள். மாறாக எதிர்மறை எண்ணங்களுடன் வலம் வருவார்கள். இவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வை பார்க்க மாட்டார்கள். வாழ்வில் அவர்கள் பிரச்னைகளின் பின்னாலே ஓடிக்கொண்டிருப்பார்கள். இது அவர்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.

விமர்சனத்துக்கு அஞ்சுவார்கள்

வாழ்வில் தோல்வியுற்றவர்கள் எப்போதும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். தோல்வி குறித்த அவர்களின் அச்சம் மற்றும் விமர்சனத்துக்கு பயந்துகொண்டேயிருப்பார்கள். இதனால் அவர்களின் வளர்ச்சியை அவர்களே தடுத்துக்கொள்வார்கள்.

தவறில் இருந்து கற்க மாட்டார்கள்

நேர்மறை எண்ணத்துடன், கடந்த காலத்தில் இருந்து கற்க மாட்டார்கள் மாறாக தங்களின் தவறுகளும் சரியே என்று கருதுவார்கள். இதனால்தான் அவர்கள் வாழ்வில் தோல்வியாளர்களாக இருக்கிறார்கள்.

எனவே இவற்றையெல்லாம் தவிர்த்தால் நீங்களும் வாழ்வில் வெற்றியாளர் ஆகமுடியும். குறிப்பாக வெற்றியாளர்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணம் மிகவும் முக்கியமானது. பிரச்னைகளை அவர்கள் கடக்கும் விதம், தீர்வுகளை தேடுவது போன்றவற்றை அவர்கள் செய்துவிட்டு வெற்றிக்கனியை தட்டிப்பறித்துவிடுவார்கள்.

வெற்றியாளர்கள் எப்போது தவறுகளை உணர்ந்து அவற்றில் இருந்து பாடம் கற்பவராக இருப்பார்கள். அவர்களுக்கு எவ்வித அச்சமும் இருக்காது. விமர்சனங்களை மதிக்கக்கூட மாட்டார்கள். இலக்குகளை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் அவர்கள் வாழ்வில் முன்னேறிச்செல்வார்கள். 

குறிப்பாக அவர்களுக்கான வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள். அதுவும் எதையும் தள்ளிப்போடாமல் உடனே முடிப்பார்கள். இவையெல்லாம் அவர்கள் வெற்றியாளர்களாக இருக்க காரணமாகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.