Exam Tips : தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் படிக்கும் பழக்கம் – உண்மை நிலவரம் என்ன?
தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் கூறுவது என்ன?

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் படிக்கும் பழக்கம் எப்படி இருக்கும்? அவர்கள் நம்மிடம் கூறுவது முற்றிலும் உண்மையா? அவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகள் என்ன? பொய்கள் என்ன? ஏனெனில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள்தான் பர்ஃபெக்ட்டானவர்கள் என்ற எண்ணம் உள்ளது. அவர்களை அனைவரும் பின்பற்றவேண்டிய நிலையும் உள்ளது. அவர்கள் படிக்கும் பழக்கம் குறித்து எப்போதும் ஒரு பேச்சு இருக்கும். எனினும், அவர்களின் வெற்றிக்காக அவர்கள் கூறும் அனைத்தும் உண்மை கிடையாது. அவர்கள் படிக்கும் பழக்கம் குறித்து நிலவும் கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
எனக்கு இடைவெளி தேவையில்லை, நான் தொடர்ந்து படிப்பேன்
எனக்கு இடைவெளியே தேவையில்லை நான் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பேன் என்பது கட்டுக்கதை. இந்த வார்த்தையை நாம் நிச்சயம் நம் பள்ளிப் பருவத்தில் கேட்டிருப்போம். அதிக மதிப்பெண்கள் பெறும் டாப்பர்ஸ் மாணவர்கள் நீண்ட நேரம், தொடர்ந்து படிப்பதாகக் கூறுவார்கள். அவர்களுக்கு இடைவெளி தேவையில்லை என்றும் சொல்வார்கள். ஆனால் ஆய்வுகளின் அறிவுறுத்தல் படி, நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமெனில் உங்களுக்கு இடையில் சிறிய இடைவெளிகள் தேவை என்கிறது.
ஒருமுறை படித்தாலே அனைத்தும் எனக்க புரிந்துவிடும்
டாப்பர்ஸ்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளுள் ஒன்று, அவர்கள் அனைத்து பாடங்களையும் முதல் முறை படிக்கும்போதே புரிந்துகொள்வார்கள் என்று கூறுவது. உண்மையில் அனைத்து மாணவர்களும் தங்களை பாடங்களை பலமுறை படிக்கவேண்டும். அப்போதுதான் அந்தப்பாடம் அவர்களுக்கு முழுமையாகப் புரியும். மனதிலும் அதை இறுத்தி வைத்துக்கொள்ள முடியும். புரிதல் என்பது தொடர்ந்து நீங்கள் மீண்டும், மீண்டும் படிப்பதால் வருகிறது.