தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stress Relief : மனஅழுத்தத்தை போக்கும் மாமருந்துகள் இவைதான்! தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்!

Stress Relief : மனஅழுத்தத்தை போக்கும் மாமருந்துகள் இவைதான்! தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்!

Priyadarshini R HT Tamil
May 21, 2024 03:59 PM IST

Stress Relief : மனஅழுத்தத்தை போக்கும் மாமருந்துகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவை உங்களுக்கு பல்வேறு பலன்களை தரும்.

Stress Relief : மனஅழுத்தத்தை போக்கும் மாமருந்துகள் இவைதான்! தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்!
Stress Relief : மனஅழுத்தத்தை போக்கும் மாமருந்துகள் இவைதான்! தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

வாழ்வில் இருந்து மனஅழுத்தத்தை குறைப்பது எப்படி?

மனஅழுத்தம் என்பது வாழ்வில் அனைவருக்கும் பொதுவாக ஏற்படுதவது, ஆனால், அதை நீங்கள் நன்முறையில் கையாள வேண்டும். அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தியானம்

தியானம், மனஅழுத்தத்தை கையாள்வதற்கான சக்திவாய்ந்த ஒன்று. சர்வதேச மருத்துவ இதழான ஜமாவில், தியானம் மனநிறைவைக் கொடுக்கும். மனஅழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே தினமும் சில நிமிடங்கள் தியானத்தில் இருங்கள். அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக்கொடுக்கும். மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு தேவையான புத்துணர்ச்சியைக் கொடுத்து மனஅமைதியைத்தரும்.

உண்மையான தொடர்புகளை உருவாக்குங்கள்

மனஅழுத்தத்தை கையாள்வதற்கு, சமூகத்தின் உதவி மிகவும் தேவையான ஒன்று. சிறந்த சமூக தொடர்பில் இருப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறைவாக இருக்கும். மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களும் அவர்களுக்கு குறைவாக சுரக்கும்.

எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் செலவிடுவதில் முக்கிய பங்காற்றுங்கள். உங்கள் உறவினர்களிடம் ஃபோனில் பேசலாம் அல்லது அவர்களின் வீடுகளுக்குச் செல்லலாம். உங்கள் உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

அரோமாதெரபி

அரோமாதெரபி என்பது தேவையான எண்ணெய்களை பயன்படுத்தி உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்காக செய்யப்படுவது, அதில் சீமைசாமந்தி, லாவண்டர் போன்ற பூக்களின் நறுமணம் இருக்கும். 

அவை நமது மனதை அமைதிப்படுத்தும். எனவே உங்கள் உடலில் தேவையான எண்ணெய்களை வைத்து தேய்க்கவேண்டும். பின்னர், உங்கள் குளியலிலும் அந்த எண்ணெய்களை சிறிதளவு பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் அதன் நன்மைகளை நீங்கள் உணரமுடியும்.

கிரியேட்டிவான செயல்கள்

வரைதல், வர்ணம் தீட்டுதல், இசைக்கருவிகள் வாசித்தால் போன்ற கிரியேட்டிவான நடவடிக்கைகள் உங்களின் மனநிலையை அமைதிப்படுத்தக்கூடியவை. எனவே ஒவ்வொரு வாரமும், ஒரு செயலில் ஈடுபட்டு உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் மகிழ்வுடன் செய்யுங்கள்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி

ஆழ்ந்த மூச்சுப்பயிறிச் உங்கள் மனதை அமைதிப்படுத்தும். உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும். இது உங்கள் இதயத்தின் துடிப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். உங்கள் மனஅழுத்தத்தை எதிர்த்து போராடும். 

4-7-8 என்ற மூச்சுப்பயிற்சியை முயற்சி செய்யுங்கள். அதாவது மூச்சை 4 நொடிகள் உள்ளிழுக்கவேண்டும். 7 நொடிகள் பிடித்து வைத்திருக்கவேண்டும். 8 நொடிகள் வெளியேற்ற வேண்டும்.

சிரிப்பு யோகா

சிரிப்பு யோகா, சிரிப்பு பயிற்சிகள் மற்றும் மூச்சுப்பயிற்களை உள்ளடக்கியது. இந்த பழக்கத்தில் நீங்கள் தன்னார்வத்துடன் சிரிக்கவேண்டும். பின்னர் அது தானாகவே வந்துவிடும். இதனால் உங்கள் உடல் போதிய அளவு ஆக்ஸிஜனை உள்ளே இழுக்கிறது. மேலும் மனஅழுத்தத்தை குறைக்கும் எண்டோர்ஃபில் ஹார்மோன்களை வெளியிடுகிறது.

பெட் சிகிச்சை

வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதும், குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைக்கிறது. எனவே பெட் விலங்குகளுடன் நேரம் செலவிடுவது, விளையாடுவது மற்றும் ஒரு விலங்கை வளர்ப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் தனிமையை போக்குகிறது. 

மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்று அமெரிக்க இதய ஆரோக்கிய மையத்தின் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியாவில் இருந்து விலகுதல்

டிஜிட்டல் திரைகளில் தொடர்ந்து இருப்பது, உங்களுக்கு மனஅழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்துகிறது. எனலே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துங்கள். 

ஒவ்வொரு நாளும் தேவையான அளவு மட்டுமே திரையை உபயோகியுங்கள். எனவே வெளியில் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். உண்மை உலகத்துடன் நீங்கள் நேரம் செலவிட்டாலே போதும் அது உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கும்.

தோட்டக்கலை

தோட்டம் அமைத்து அதை பராமரிப்பதும் உங்களின் மனஅழுத்தத்தை போக்கு மாமருந்து ஆகும். இது உங்கள் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. விதைத்தல், வளர்த்தில், அறுவடை செய்தல் என ஒவ்வொரு செடியையும் வளர்த்து எடுப்பதே ஒரு தியானம் போன்றது. 

இதுவும் உங்கள் தினமும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்த தப்பிக்கவைக்க உதவுகிறது. இயற்கையிடன் உங்களை இணைந்திருக்க வைக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்