தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stress : சரும கோளாறுகள் முதல் கருத்தரித்தல் பிரச்னைகள் வரை மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இவை!

Stress : சரும கோளாறுகள் முதல் கருத்தரித்தல் பிரச்னைகள் வரை மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இவை!

Priyadarshini R HT Tamil
Jun 03, 2024 11:37 AM IST

Stress : சரும கோளாறுகள் முதல் கருத்தரித்தல் பிரச்னைகள் வரை மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இவைதான். எனவே கவனம் தேவை.

Stress : சரும கோளாறுகள் முதல் கருத்தரித்தல் பிரச்னைகள் வரை மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இவை!
Stress : சரும கோளாறுகள் முதல் கருத்தரித்தல் பிரச்னைகள் வரை மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் இவை!

ட்ரெண்டிங் செய்திகள்

நீங்கள் கடும் மனஉளைச்சலில் இருந்தால் உங்கள் உடலில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும்.

உங்கள் மனஅழுத்தம் உங்கள் உடலில் எதிரொலிக்கும்

வாழ்வில் நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மனஅழுத்தம் உள்ளது. ஆனால், அது நாள்பட்டதாக இருக்கும்போது உங்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இது சில உடல்நலக்குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது. நாள்பட்ட மனஅழுத்தம் இருந்தால், உங்கள் உடல் சில பதில்களைக் கொடுக்கும். நாள்பட்ட மனஅழுத்தம் கார்டிசால், அட்ரனலைன் போன்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை சுரக்கச்செய்யும். இது உங்கள் உடலின் பல்வேறு இயக்கங்களையும் பாதிக்கும்.

உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் அதனால் உடலில் தெரியும் அறிகுறிகள்

உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால், அதன் அறிகுறிகளாக தலைவலி, தோல் வியாதிகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் அல்லது இதய நோய்கள், நோய் எதிர்ப்பு மண்டல சிதைவு ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகளை நீங்கள் புரிந்துகொண்டு, உங்கள் மனஅழுத்தத்தைப் போக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது ஒட்டுமொத்த உடல் நலனையும் காக்கும்.

செரிமானக் கோளாறுகள்

மனஅழுத்தம் முதலில் உடலின் செரிமான மண்டலத்தைதான் பாதிக்கிறது. அதன் அறிகுறிகளாக வயிற்று வலி, வாந்தி, மயக்கம், செரிமானமின்மை மற்றும் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் ஆகியவை உள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், செரிமான மண்டலத்தின் ரத்தத்தை மடைமாற்றுகிறது. இதனால் உங்கள் உடலில் வழக்கமான செரிமானம் பாதிக்கப்படுகிறது.

தசை இறுக்கம் மற்றும் வலி

மனஅழுத்தம், தசைகளை இறுக்கமாக்குகிறது. இதனால் உடலின் பல்வேறு பாகங்களிலும் வலி ஏற்படுகிறது. குறிப்பாக கழுத்து, தோள்பட்டை, முதுகு என அனைத்து பாகங்களிலும் வலி ஏற்படுகிறது. தொடர்ந்து தசை இறுக்கம் இருப்பது, நாள்பட்ட வலி உபாதைகளை ஏற்படுத்தும்.

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி

மனஅழுத்தம், உங்களுக்கு தேவையற்ற டென்சனை ஏற்படுத்துகிறது. இதனால் தலைவலி, ஒற்றைத்தலைவலி ஆகியவை ஏற்படுகிறது. உங்கள் தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இது உங்களுக்கு வலியையும், அசவுகர்யத்தையும் ஏற்படுத்துகின்றன. நாள்பட்ட மனஅழுத்தத்தால் இந்த தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது. அது கடுமையாகிறது.

இதய கோளாறுகள்

மனஅழுத்தம் இதய துடிப்பை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தையும் கூட்டுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் மனஅழுத்தம், நாள்பட்ட இதய கோளாறுகளை உருவாக்குகிறது. அதில் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும். மனஅழுத்தம் தொடர்பான அட்ரினலைன் உயர்ந்து, உங்கள் வழக்கமான இதயத்துடிப்பை எகிறச் செய்யும்.

நோய் எதிர்ப்பு மண்டல அழுத்தம்

நாள்பட்ட மனஅழுத்தம் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மோசமடையச் செய்யும். உங்களை நோய்களுக்கும், தொற்றுகளுக்கும் ஆளாக்கும். இதனால் உங்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படும். கார்டிசால் போன்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலைக் குறைக்கும்.

எடையில் மாற்றம்

மனஅழுத்தம் உங்கள் எடையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பசியைக் குறைக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைவு என ஏதேனும் ஒன்று ஏற்படும். மனஅழுத்தத்தால் சிலர் அதிகம் சாப்பிடுவார்கள். சிலருக்கு பசியே ஏற்படாது. இதனால் அவர்களுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

கருத்தரித்தல் கோளாறுகள்

பெண்களில், மனஅழுத்தம் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அதிக வலியை உணர்வார்கள். அவர்களின் பாலியல் உணர்வு குறையும். ஆண்களில், மனஅழுத்தம் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும். விறைப்பு குறைபாடு ஏற்படும். விந்தணுக்களின் உற்பத்தி குறையும்.

சரும பிரச்னைகள்

மனஅழுத்தத்தால், உங்கள் சருமத்தின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் சொரியாசிஸ், ஈசிமா, முகப்பருக்கள் போன்ற சரும வியாதிகள் ஏற்படும். மனஅழுத்தம் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால், உங்கள் உடலில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும். அது சருமப்பிரச்னைகளை மேலும் மோசமாக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்