Kidney Stone Vegetables: வயிற்றில் வலி இருந்தால் இதைச் சாப்பிடாதீங்க.. சிறுநீரக் கல் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்
Kidney Stone Vegetables: வயிற்றில் வலி இருந்தால் இதைச் சாப்பிடாதீங்க.. சிறுநீரக் கல் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்

Kidney Stone Vegetables: வயிற்றில் வலி இருந்தால் இதைச் சாப்பிடாதீங்க.. சிறுநீரக் கல் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்துப் பார்ப்போம்.
பலரையும் வாட்டி வதைக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று, சிறுநீரகக் கற்கள். சிறுநீரகக் கற்கள் வயிற்றில் மிகப்பெரிய வலியைத் தரக்கூடியது.
அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஒரு நிமிடம் கூட தாங்க முடியாத வலி, சிறுநீரக்கற்களால் உண்டாகிறது. இப்போதெல்லாம், சிறுநீரகக் கற்கள் மிகவும் பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்காக, நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரகக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கும் சில காய்கறிகள் குறித்துப் பார்க்கவும்.
பசலைக்கீரை:
பசலைக்கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.
பசலைக் கீரையை சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், எப்போதும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். கீரையில் உள்ள ஆக்சலேட்டின் அளவு மிக அதிகம். இந்த ஆக்சலேட் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகக் கற்களால் பிரச்னை இருந்தால் கீரையைக் குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.
கத்தரிக்காய்:
கத்திரிக்காயை அதிகமாக உட்கொள்வதும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும். கத்தரிக்காய் நம் உடலுக்கு நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களுக்கும் கூடுதலாக, கத்திரிக்காயில் உள்ள ஆக்சலேட்டின் அளவும் மிக அதிகம்.
இதனால் சிறுநீரகக்கல் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் அதிகம். சிறுநீரகக்கற்கள் பிரச்னை உங்களிடம் இருந்தால், முடிந்தவரை குறைந்த அளவில் கத்தரிக்காயை உட்கொள்ளுங்கள்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். வெள்ளரி மற்றும் வெள்ளரி விதைகளில் அதிக அளவு ஆக்சலேட் கலவைகள் உள்ளன. இது சிறுநீரகக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் பிரச்சனை இருந்தால், வெள்ளரிக்காயை குறைவாக உட்கொள்வது நல்லது.
உருளைக்கிழங்கு:
தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் அறிக்கையின்படி, உருளைக்கிழங்கு மற்றும் சோயாபீன்ஸ் பெரும்பாலும் பெரும்பாலான மக்களால் உண்ணப்படுகின்றன. இவற்றில் ஆக்சலேட் அதிகம் உள்ளது. இது சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே, உருளைக்கிழங்கினையும் சோயா பீன்ஸையும் தினமும் உட்கொண்டால் சிறுநீரகங்களுக்கு சற்று தீங்கு விளைவிக்கும். மேலும், ஏற்கனவே சிறுநீரகக் கல் பிரச்னைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் உருளைக்கிழங்கு மற்றும் சோயாபீன்ஸ் உட்கொள்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
(குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ், இந்த விஷயம் முற்றிலும் துல்லியமானது என்று கூறவில்லை. இந்த விஷயத்தில் துல்லியமான தகவல்களுக்கு தொடர்புடைய துறையில் உள்ள நிபுணர்களை அணுகவும்.)

டாபிக்ஸ்