Stomach Cleaning : வீட்டிலே செய்யக்கூடிய எளிய பேதி முறை! மாதத்தில் ஒரு நாள் எடுக்கலாம்! யார் செய்யக்கூடாது?
பேதி மாத்திரை அல்லது பேதியுறை எடுக்கும்போது, நமக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தால் நாம் அதை எடுப்பதற்கு தயங்குகிறோம். ஆனால் இது உங்களுக்கு எவ்வித பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது.
கர்ப்பிணிகள், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள், மாதவிடாயில் சீரற்ற நிலை, அதிக உதிரப்போக்கு அல்லது உதிரம் சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் உள்ளவர் இதை செய்யக்கூடாது.
பேதி மாத்திரை அல்லது பேதியுறை எடுக்கும்போது, நமக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தால் நாம் அதை எடுப்பதற்கு தயங்குகிறோம். ஆனால் இது உங்களுக்கு எவ்வித பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 2 (விதைகளை நீக்கிவிட்டு நறுக்கிக்கொள்ள வேண்டும்)
தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
செய்முறை
இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு, அடித்துக்கொள்ள வேண்டும். 75 மில்லிலிட்டர் எடுத்து பருகவேண்டும். இதை காலை வெறும் வயிற்றில் செய்யும்போது, 4 முதல் 5 முறை நன்றாக கழிவுகள் வெளியேறிவிடும்.
இதற்க பின்னர் உங்களுக்கே வயிறு சுத்தமான உணர்வு ஏற்படும். அப்போது ஒரு டம்ளர் மோர் அல்லது தயிர் சாதம் சாப்பிட்டு முடித்துக்கொள்ள வேண்டும்.
இதை செய்யும் நாளில் எளிதாக செரிக்கக்கூடிய உணவுகள் மட்டுமே சாப்பிடவேண்டும். செரிக்க சிரமமான அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அடுத்த வேளைகளுக்கு ரசம் போன்ற சாதங்களை மட்டுமே சாப்பிடவேண்டும். இது உங்களுக்கு நல்ல உணர்வைக் கொடுக்கும்.
நாளிரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என்று நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். ஒரு நாளில் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை பேதியுறை எடுக்க வேண்டும். இதுதான் அதற்கான அர்த்தம். இதை செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இதை நம் முன்னோர்கள் நாம் எடுத்துக்கொள்ளும் சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதை பின்பற்றும்போது நாம் ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும் என்பது அவர்களின் கணிப்பு.
ஆனால் கர்ப்பிணிகள், கர்ப்பத்துக்கு முயற்சிப்பவர்கள் கட்டாயம் எந்த வகையான பேதி முறைகளையும் பின்பற்றக்கூடாது. ஏனெனில், பேதியுடன் அவர்களின் கர்ப்பமும் சேர்த்து கரைந்துபோகும் ஆபத்து ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அன்றாடம் இரண்டு முறை மலம் கழிப்பதும் வற்புறுத்தப்படுகிறது. ஏனெனில், நம் உடலில் இருந்து அன்றைய கழிவுகள் நீங்கினால்தான் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
கழிவுகள் உடலில் அதிகம் சேரும்போதுதான், நம் உடலில் வியாதிகள் அதிகரிக்கிறது. எனவே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்