Stomach Cancer : அசால்டா இருக்காதீங்க.. அடிக்கடி வயிற்று வலியால் அவதியா.. புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்!
Stomach Cancer : சிலருக்கு மேல் வயிற்றில் அசௌகரியம் அல்லது வலி ஏற்படும். குறிப்பாக உணவு உண்ட பிறகு வயிற்றில் எரியும் உணர்வு. அத்துடன் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அடிக்கடி அஜீரணம் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்தால், வயிற்றுப் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.

Stomach Cancer : மாறிவரும் கால சூழல் பலருக்கும் ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதில் வயிற்று புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. வயிற்றுப் புற்றுநோயை இரைப்பை புற்றுநோய் என்றும் அழைப்பர். இது மிகவும் ஆபத்தான புற்றுநோய். வயிற்றில் புற்றுநோய் செல்கள் அசாதாரணமாக வளரத் தொடங்கும் போது கட்டிகள் உருவாகின்றன. அது புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது உடலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவும்.
சில நேரங்களில் ஒரு நபரின் வயிறு உணவுக்குழாய் சந்திக்கும் இடத்தில் வயிற்று புற்றுநோய் உருவாகத் தொடங்குகிறது. வயிற்றுப் புற்றுநோய் யாருக்கெல்லாம் உருவாகிறது என்பதை மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
55 முதல் 60 வயதிற்குப் பிறகு வயிற்று புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது.
பெண்களை விட மது அருந்தக்கூடிய ஆண்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வயிற்றுப் புற்றுநோய் பரம்பரை பரம்பரையாகவும் வரலாம். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த புற்றுநோய் இருந்தால் சந்ததியினர் கவனமாக இருக்க வேண்டும். இது பருமனானவர்களிடமும் அதிகம் காணப்படும்.
வயிற்று புற்றுநோய் அறிகுறிகள்
வலி, அசௌகரியம்:
சிலருக்கு மேல் வயிற்றில் அசௌகரியம் அல்லது வலி ஏற்படும். குறிப்பாக உணவு உண்ட பிறகு வயிற்றில் எரியும் உணர்வு. அத்துடன் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இலேசான உணவுகளை சாப்பிட்டாலும் இந்த அஜீரணம் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்தால், வயிற்றுப் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
பசியின்மை / எடை இழப்பு:
புற்றுநோய் பாதிக்கப்ட்டவர்கள் திடீரென்று எடை இழக்கலாம். அவர்களுக்கு பசி கூட அதிகம் இருக்காது. நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாவிட்டாலும் சாப்பிடும் ஆசை இவர்களுக்கு ஏற்படாது. இதனால் அவர்களின் உடல்நிலை மோசமடைகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பலவீனம்:
சிறிய வேலைகளைச் செய்தாலும் பலவீனமாக உணர்வார்கள். நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். இவை அனைத்தும் வயிற்று புற்றுநோயைக் குறிக்கின்றன. உணவு உண்பது, நடப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்ற அன்றாட வேலைகளைக்கூட அவர்களால் செய்ய முடிவதில்லை. அவர்கள் திடீரென்று பலவீனமாகிறார்கள்.
வயிற்று வலி:
வயிற்றில் ஒரு கூர்மையான பிடிப்பு போன்ற வலி. இது காலப்போக்கில் தாங்க முடியாததாகிறது. இந்த வலி வயிற்றின் நடுப்பகுதியில் அல்லது மேல் வயிற்றில் இருக்கலாம். வயிற்று வலி வந்து நீங்கும்.
குமட்டல், வாந்தி:
எந்த பிடித்த உணவையும் பார்த்த உடனே சாப்பிடுபவர்களுக்கு கூட சாப்பாட்டு மேலான பிடிப்பு குறையும். எதுவும் சாப்பிடாமலேயே வாந்தி எடுக்கத் தோன்றும். இது எடை இழப்பு மற்றும் பசியின்மைக்கு வழிவகுக்கிறது.
மலத்தில் இரத்தம்:
வயிற்றுப் புற்றுநோயால் இரைப்பை குழாயில் இரத்தப்போக்கு ஏற்படலாம். இதன் விளைவாக வாந்தி அல்லது மலத்தில் இரத்தம் ஏற்படுகிறது. இந்த இரத்தம் பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும். இது ஹீமாடோசீசியா என்றும் அழைக்கப்படுகிறது. இரத்தம் தோய்ந்த மலம் மற்ற அடிப்படை சுகாதார நிலைகளையும் குறிக்கலாம். உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம்.
எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்
மருத்துவர்களின் கூற்றுப்படி வயிற்றுப் புற்றுநோய்க்கான சிகிச்சையானது, வயிற்றின் உள்புறத்தில் புற்றுநோய் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைப் பொறுத்தது. நோயறிதல் பொதுவாக எண்டோஸ்கோபி, பயாப்ஸி, CT ஸ்கேன் மூலம் செய்யப்படுகிறது. புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து, நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன், நோயாளிக்கு கீமோதெரபி வழங்கப்படுகிறது. அது குறைய நீண்ட நேரம் எடுக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்