பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் கறைகள்; இந்த இரண்டு முறைகள் பயன்படுத்தி போக்கலாம்!
பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள கறைகளைப் போக்குவது எப்படி?
நமது வீட்டில் உள்ள குளியலறை மற்றும் கழிவறைகளில் ஒட்டி வைத்துள்ள டைல்ஸ்களில் விடாப்படியான கறைகள் ஒட்டிக்கொண்டு, அவற்றை சுத்தம் செய்வது உங்களுக்கு பெரும் சவாலான காரியமாக இருக்கும். மேலும் ரெஸ்ட் ரூம்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரும் பெரும்பாலும் உப்பு நீராகத்தான் இருக்கும். அதுவும், உங்கள் சுவர்களில் கறைகளை ஏற்படுத்தும். இதற்கு 2 வழிகள் உள்ளது. அவை என்னவென்று பாருங்கள். இவற்றை தேய்ப்பதால் உங்கள் கைகளில் வலி வரும். அனைத்து வகை கரைகளையும் நீங்கள் கைகளில் வலிகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் சுத்தம் செய்ய முடியும். அதற்கு 2 முறைகள் உள்ளது அவை என்னவென்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பீதாம்பரி – ஒரு ஸ்பூன்
வினிகர் – கால் கப்
செய்முறை
ஒரு கப்பில் வினிகர் மற்றும் பீதாம்பரி ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கவேண்டும். அதை பாத்ரூமில் கறை உள்ள இடத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவேண்டும். பின்னர் நன்றாக பிரஷ் அல்லது துடைப்பம் வைடத்து நன்றாக தேய்த்துக்கொள்ளவேண்டும். ஊற வைக்கும்போதுதான் கரைகள் நன்றாக வெளியேறும். எனவே ஊறவைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இரண்டாவது முறை
தேவையான பொருட்கள்
ஹார்பிக் – கால் கப்
அஜினமோட்டோ – 2 டேபிள் ஸ்பூள்
செய்முறை
ஹார்பிக் மற்றும் அஜினமோட்டோ என இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளவேண்டும். தண்ணீர் ஊற்றாமல் கலக்கவேண்டும். இதை பெயின்ட் அடிக்கும் பிரஷ்ஷால் அழுக்கு அதிகம் உள்ள சுவர்களின் மீது தேய்க்கவேண்டும். கொஞ்சம் அதிகமாகவே தடவவேண்டும். இதையும் அரை மணி நேரம் ஊறவிட்டு, பிரஷ்ஷால் தேய்த்தால் அந்த கறைகள் எளிதில் நீங்கள் உங்கள் பாத்ரூம் பளிச்சிடும். இவையிரண்டையும் நீங்கள் வீட்டில் எளிதாக செய்ய முடியும். இதற்காக நீங்கள் கவலையோ அல்லது ஆசிட் வாங்கியோ உபயோகிக்க வேண்டாம்.
மேலும் உங்களுக்கு சில குறிப்புகள்
உங்களுக்கு சில குறிப்புகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எளிய வீட்டுக்குறிப்புகள் உங்கள் வேலையை எளிதாக்கும்.
இந்த சின்ன சின்ன சமையலறை குறிப்புகள் உங்கள் சமையலுக்கு உதவும். மேலும் வீட்டு உபயோக குறிப்புக்களையும் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
மெழுகுவர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
மிக்ஸியில் சட்னி மசாலா போன்றவற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்