Sambara Dosai : ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு பிடித்த ஏகாதசி சம்பார தோசை; பெயரே வித்யாசமாக உள்ளதா? சூப்பர் சுவையானது!
ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பிடித்த சம்பார தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பச்சரிசி – கால் கிலோ
உளுந்து – 80 கிராம்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி – ஒரு ஸ்பூன்
ஏலக்காய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
(பச்சரிசி, கருப்பு உளுந்து மட்டுமே சேர்க்க வேண்டும். தோசை வார்க்க நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுக்குப் பொடி தான் இந்த தோசைக்கு ஆதாரம். ஏலக்காய் ஒரு ஆப்ஷன் மட்டுமே. தேவையில்லையென்றால் தவிர்த்துவிடலாம்)
செய்முறை
அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் நன்றாகக் கழுவி தனித்தனியாக 5 மணி நேரங்கள் ஊற வைக்கவேண்டும். பின்னர் அதை கிரைண்டரில் ஒன்றாகப் போட்டு மாவை அரைத்துக் கொள்ளவேண்டும். மாவு மிக நைஸாக அரைக்கக் கூடாது. கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கவேண்டும். அரைத்த மாவை இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவேண்டும்.
அடுத்த நாள் மிளகு, சீரகம், ஏலக்காய் இடிக்கவும். மிக்ஸியில் போட்டு பவுடராக்கிவிடக்கூடாது. ஒன்றிரண்டாக உரலில் இடிப்பது சிறந்தது. தோசை வார்க்கும் முன் மாவில் உப்பு, இடித்த மிளகு, சீரகம், சுக்குப்பொடி, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து தேவையான நீர் ஊற்றி அடைதோசை பதத்திற்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன், ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதன் மேல் 2 ஸ்பூன் மாவை ஊற்றி தோசை வார்க்கவேண்டும். மாவை வட்டமாக கரண்டியில் தேய்க்க வேண்டாம் கனமாகவே இருக்கட்டும். இதை மூடி போட்டு 2 நிமிடம் வேகவிட்டு, திருப்பி மறுபுறமும் 1 ஸ்பூன் நெய்விட்டு 2 நிமிடம் மூடி வேகவிடவேண்டும்.
பெருமாளுக்கு பிடித்த பிரசாதமான அற்புதமான ஏகாதிசி சம்பார தோசை வீட்டிலேயே தயார். இன்னொரு விஷயம் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இந்த தோசை ஒரு நல்ல மருந்து. ஸ்ரீரங்கத்தில் இந்த தோசை பெருமாளுக்கு பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. எனவே இந்த கோயிலுக்கு வருபவர்கள் இந்த தோசையை மறக்காமல் வாங்கி சுவைத்துப் பாருங்கள். இந்த தோசை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்
கரம் மசாலா பொடி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பட்டை 50 கிராம்
ஏலக்காய் – 30 கிராம்
கிராம்பு – 10 கிராம்
சோம்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
ஜாதிக்காய் – அரை
கல்பாசி – 10 கிராம்
செய்முறை
ஒரு கடாயில் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் வறுக்கவேண்டும். இது நன்றாக ஆறியவுடன், மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்வேண்டும். கரம் மசாலாப் பொடி தயார். இதை நீங்கள் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் தயாரிக்கும் அனைத்து மசாலாக்கள், பிரியாணி, அசைவ உணவுகள், சைவ குருமாக்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்