Sprouts Pulao: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவு ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sprouts Pulao: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவு ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Sprouts Pulao: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவு ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 10, 2024 12:00 PM IST

Sprouts Pulao Recipe: ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்வை (முளைகட்டிய பயிறுவகைகளை ) ஒருமுறை செய்து பாருங்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு இதுவே சிறந்த காலை உணவு.

சத்தான ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்
சத்தான ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்

ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்

முளைகட்டிய பயிறுகள் - அரை கப்

அரிசி - ஒரு கப்

குடைமிளகாய் - ஒன்று

பீன்ஸ் - நான்கு

காரட் - 2

தக்காளி - ஒன்று

பூண்டு பல் - மூன்று

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

சீரகப் பொடி - ஒரு ஸ்பூன்

மிளகாய் - அரை ஸ்பூன்

இஞ்சித் தூள் - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - அரை ஸ்பூன்

உப்பு - சுவைக்கு தேவையான அளவு

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை

1. சாதத்தை தனியாக வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.

2. எண்ணெய் சூடான பின் சீரகம் சேர்த்து வதக்கவும்.

3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

5. இஞ்சி பூண்டின் பச்சை வாடை போன பிறகு நறுக்கிய கேப்சிகம் அதாவது குடை மிளகாய் மற்றும் பீன்ஸ், காரட் சேர்த்து வதக்க வேண்டும்.

6. மேலும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

7. இவை அனைத்தும் மென்மையாகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.

8. பிறகு அந்த கலவையில் மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து மெல்லிய தீயில் வைக்கவும்.

9. பின்னர், முளைகட்டிய பயிறுகளை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்..

10. பின்னர் ஏற்கனவே வேக வைத்த சாதத்தை இதில் சேர்த்து கலந்து விட வேண்டும்.

11. இந்த முளைகள் சிறிது வெந்த பின்னர், சாதத்தை கலந்து உப்பை சரி பார்த்து கொள்ள வேண்டும்.

12. பின்னர் மேலாக விருப்பம் உள்ளவர்கள் தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடலாம். அவ்வளவுதான். ருசியான முளைகட்டிய பயிறு சாதம் ரெடி.

வயிறு நிரம்ப ஒரு கப் ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் போதும். எனவே அதிகமாக செய்ய வேண்டாம். ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு கப் முளை கட்டிய பயிறுகளை மட்டுமே சாப்பிட முடியும். ஏனெனில் இதில் புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு கோப்பைக்குப் பிறகு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இந்த சாததம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த செய்முறையாகும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த ரெசிபி என்றும் கூறப்படுகிறது.

மிகவும் எளிமையான இந்த உணவை நீங்களும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து உடல் நலம் பெறுங்கள்.

குறிப்பு:  இதில் வெயிட் ரைஸ்க்கு பதிலாக பிரவுன் ரைஸ் சேர்த்தும் செய்யலாம். அது மேலும் ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.