கீரை கூட்டு : சிறு கீரை, அரைக்கீரை, முளைக்கீரை என எந்த கீரையிலும் செய்ய முடிந்த ஒட்டல் ஸ்டைல் கீரைக் கூட்டு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கீரை கூட்டு : சிறு கீரை, அரைக்கீரை, முளைக்கீரை என எந்த கீரையிலும் செய்ய முடிந்த ஒட்டல் ஸ்டைல் கீரைக் கூட்டு!

கீரை கூட்டு : சிறு கீரை, அரைக்கீரை, முளைக்கீரை என எந்த கீரையிலும் செய்ய முடிந்த ஒட்டல் ஸ்டைல் கீரைக் கூட்டு!

Priyadarshini R HT Tamil
Published May 11, 2025 04:17 PM IST

கீரை கூட்டு : இதை சாதத்தில் சேர்த்து மட்டுமல்ல, டிஃபனுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இந்த கூட்டை அனைத்து கீரைகளிலும் செய்ய முடியும்.

கீரை கூட்டு : சிறு கீரை, அரைக்கீரை, முளைக்கீரை என எந்த கீரையிலும் செய்ய முடிந்த ஒட்டல் ஸ்டைல் கீரைக் கூட்டு!
கீரை கூட்டு : சிறு கீரை, அரைக்கீரை, முளைக்கீரை என எந்த கீரையிலும் செய்ய முடிந்த ஒட்டல் ஸ்டைல் கீரைக் கூட்டு!

தேவையான பொருட்கள்

• துவரம் பருப்பு – அரை கப்

• பாசிப் பருப்பு – அரை கப்

• பூண்டு – 6 பல்

• பச்சை மிளகாய் – 2

• தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

• விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்

• அரைக்கீரை – ஒரு கட்டு (ஆய்ந்து பொடியாக நறுக்கியது)

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• சோம்பு – கால் ஸ்பூன்

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கியது)

• வர மிளகாய் – 2

• பூண்டு – 4 பல் (இடித்தது)

• உப்பு – தேவையான அளவு

• சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. முதலில் ஒரு குக்கரில் துவரம் பருப்பு, பாசி பருப்பு என இரண்டையும் அலசி சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், விளக்கெண்ணெய் என அனைத்தையும் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, சோம்பு, சீரகம் என அனைத்தும் சேர்த்து பொரிந்தவுடன், அதில் வர மிளகாயை சேர்த்து தாளிக்கவேண்டும்.

3. அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

4. அடுத்து இடித்த பூண்டு பல் சேர்த்துவிட்டு, நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

5. அடுத்து அதில் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கிவிட்டு, வெந்த பருப்பை நன்றாக மசித்து, கீரையில் சேர்த்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

6. இதை நன்றாக கடைந்துவிட்டு, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இந்த கீரை கூட்டை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இதை சாதத்தில் சேர்த்து மட்டுமல்ல, டிஃபனுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இந்த கூட்டை அனைத்து கீரைகளிலும் செய்ய முடியும்.