தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soya Urundai Kulambu : வழக்கமான உருண்டை குழம்பு இல்லை; இதை சோயாவில் செய்யவும்! இதோ ரெசிபி!

Soya Urundai Kulambu : வழக்கமான உருண்டை குழம்பு இல்லை; இதை சோயாவில் செய்யவும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
May 26, 2024 06:25 AM IST

Soya Urundai Kulambu : வழக்கமான உருண்டை குழம்பு இல்லை; இதை சோயாவில் செய்யவும்! இதோ ரெசிபி!

Soya Urundai Kulambu : வழக்கமான உருண்டை குழம்பு இல்லை; இதை சோயாவில் செய்யவும்! இதோ ரெசிபி!
Soya Urundai Kulambu : வழக்கமான உருண்டை குழம்பு இல்லை; இதை சோயாவில் செய்யவும்! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

சோம்பு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கடலை மாவு – கால் கப்

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1

தக்காளி – 1

தேங்காய் துருவல் – ஒரு கப்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

(இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 8 பல் என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது விழுதாக இருந்தால் அதையும் எடுத்துக்கொள்ளலாம்)

மிளகு – ஒரு ஸ்பூன்

முந்திரி – 10

கசகசா – அரை ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

(முழு கரம் மசாலா சேர்த்தால் பட்டை – 1, கிராம்பு – 2, ஸ்டார் சோம்பு – 1, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 1, ஜாவித்திரி – சிட்டிகையளவு, கல்பாசி – சிட்டிகையளவு என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்)

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் சோயாவை அரைமணி நேரம் சூடான தண்ணீரில் சேர்த்து பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதில் சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் கொர கொராப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதில் கடலைமாவு, உப்பு, கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து நன்றாக உருண்டைகளாக உருட்டி எடுத்து ஆவியில் வைத்து வேகவைக்கவேண்டும்.

உருண்டை மாவில் சிறிதளவு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அதை குழம்பில் கரைத்து சேர்க்க வேண்டும். அப்போது தான் குழம்பு நல்ல திக்காக வரும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளி, தேங்காய், இஞ்சி – பூண்டு விழுது, மிளகு, முந்திரி, கசகசா, கரம் மசாலா, கரம் மசாலா (பொடியாக சேர்த்தால் அப்படியே சேர்க்கவேண்டும். தனியாக சேர்த்தால் அனைத்தையும் சேர்க்கவேண்டும்) மிளகாய் தூள், மல்லித்தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வதக்கியவற்றை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் வெந்த உருண்டைகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.

பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அரைத்து வைத்துள்ள சோயா மாவில் எடுத்துவைத்ததையும் கரைத்து குழம்பில் சேர்க்கவேண்டும்.

பின்னர் வேகவைத்து, எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்த உருண்டைகளை குழம்பில் சேர்க்கவேண்டும்.

நன்றாக கொதித்து வந்தவுடன் கைப்பிடியளவு மல்லித்தழை தூவி இறக்கவேண்டும்.

சூடான சாதத்தில் இந்த குழம்பை சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இந்த குழம்பை ஒருமுறை ருசித்தால், அடிக்கடி சாப்பிடத் தூண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த குழம்பை விரும்பி சாப்பிட்டாலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.

மட்டன் குழம்பு செய்யாத ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வதற்கு ஏற்றது இந்த குழம்பு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்