சோயா 65 : வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்பிடணுமா? இந்தாங்க ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சோயா 65 : வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்பிடணுமா? இந்தாங்க ரெசிபி!

சோயா 65 : வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்பிடணுமா? இந்தாங்க ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published Jun 09, 2025 03:23 PM IST

சோயா 65 : சோயா 65 செய்வது எப்படி என்று பாருங்கள்.

சோயா 65 : வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்பிடணுமா? இந்தாங்க ரெசிபி!
சோயா 65 : வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்பிடணுமா? இந்தாங்க ரெசிபி!

தேவையான பொருட்கள்

• மீல் மேக்கர் – ஒரு கப்

(இதை சூடான தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து, அப்படியே எடுத்து ஆறிய நீரில் சேர்த்து வடித்து கைகளால் அல்லது துணியில் சேர்த்து பிழிந்து எடுக்கவேண்டும். 65 செய்வதற்கு ஊறிய சோயாக்களை நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் கைகளால் பிழிந்தால், ஒரு 10 முதல் 15 முறை பிழிந்து எடுக்கவேண்டும். எனவே ஒரு வெள்ளை பனியன் துணையில் போட்டு பிழிந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் சில நிமிடங்களில் நீங்கள் சோயாவை பிழிந்து எடுத்துக்கொள்ள முடியும்)

• கார்ன் ப்ளார் – ஒரு ஸ்பூன்

• மைதா மாவு – கால் ஸ்பூன்

• அரிசி மாவு – அரை ஸ்பூன்

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்ழுன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

• எலுமிச்சை சாறு – கால் ஸ்பூன்

• உப்பு - தேவையான அளவு

• எண்ணெய் – தாராளமாக (பொரிக்க தேவையான அளவு)

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளார், மைதா, அரிசி மாவு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும்.

2. பிழிந்த மீல் மேக்கரை சேர்த்து ஊறவிடவேண்டும். அதை 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கடாயில் எண்ணெய் சேர்த்து அதை சூடாக்கி, அதில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். சூப்பர் சுவையான மீல் மேக்கர் 65 தயார்.

பெரிய மீல்மேக்கரை எடுத்திருந்தால், ஊற வைத்து பிழிந்து எடுத்து, இரண்டாக வெட்டி, பின்னர் மசாலாவில் சேர்த்து கலக்கவேண்டும். சிறிய மீல் மேக்கரை அப்படியே பயன்படுத்தலாம். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸாக செய்துகொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்புவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.