Insomnia: தூக்கம் வரமா இருக்குதா? நீங்க பாக்குற வேலையும் காரணமா இருக்கலாம்! புதிய ஆய்வில் தகவல்!
Insomnia: ஒரு நபரின் வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நல்ல தூக்கமே அந்த நபரின் அனைத்து விதமான ஆரோக்கியத்தையும் நிர்வகிக்கிறது. தூக்கம் சரியில்லை என்றால் உடல் நலமும் கெட்டு விடும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை தரமான தூக்கத்தைத் தடுக்கின்றன. ஒரு நபரின் வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நல்ல தூக்கமே அந்த நபரின் அனைத்து விதமான ஆரோக்கியத்தையும் நிர்வகிக்கிறது. தூக்கம் சரியில்லை என்றால் உடல் நலமும் கெட்டு விடும். ஆனால் உங்கள் வேலையின் தன்மையும் இந்த தூக்கமின்மைக்கு பங்களிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் கிளாரி ஸ்மித் தலைமையிலான ஒரு ஆய்வு, தூக்கத்தை பாதிக்கும் இரண்டு வகையான தொழில்கள் உள்ளன என்று கூறுகிறது. ஒகேஷனல் ஹெல்த் சைக்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து (மேசை வேலைகள்) வேலை செய்பவர்கள் மற்றும் இரவு நேர வேலைகளில் தவறாமல் வேலை செய்பவர்கள் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகிறது. உறங்குவதில் சிரமம், தூக்கத்தின் போது அடிக்கடி விழிப்பு மற்றும் மோசமான தூக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
உட்கார்ந்தபடியான வேலைகள்
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அதிக நேரம் அசைவில்லாமல் ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் உட்கார்ந்தபடியான வேலைகள் போன்ற வேலைகளில் வேலை செய்பவர்களிடையே இத்தகைய தூக்கப் பிரச்சனைகளின் ஆபத்து அதிகம்.