Snake gourd Pachadi : புடலங்காயில் செய்யலாம் தயிர்பச்சடி! ஆஹா! எத்தனை சுவை நிறைந்தது பாருங்கள்!
Snake gourd Pachadi : புடலங்காயில் செய்யலாம் தயிர்பச்சடி. ஆஹா, எத்தனை சுவை நிறைந்தது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் – 2
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் – கால் கப்
நறுக்கிய இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தயிர் – ஒரு கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்
வர மிளகாய் – 2
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் புடலங்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் கலந்த நீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தனியாக வைக்கவேண்டும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவேண்டும். இப்போது துருவிய தேங்காய் துருவல் மற்றும் வேகவைத்த புடலங்காய் துண்டுகளை தயிருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
மேலும், கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் உளுத்தம் பருப்பு , கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும். கடுகு பொரிந்த பின், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
இந்த தாளிப்பை தயிர் கலவையுடன் சேர்த்து, இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவேண்டும். மிகவும் சுவையான புடலங்காய் தயிர் பச்சடி தயார்.
இதை பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா, விருந்து உபசரிப்புகளில் பரிமாறலாம். சாம்பார் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளமுடியும்.
புடலங்காயில் உள்ள நன்மைகள்
புடலங்காயின் கார்போஹைட்ரேட்கள், கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளது. ஃபினோலின் மற்றும் குகுர்பிடாசின்கள் உள்ளது.
100 கிராம் புடலங்காயில் 86.2 கலோரிகள் உள்ளது. 3.9 கிராம் கொழுப்பு, 0.5 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 12.5 கிராம் கார்போஹைட்ரேட், 0.6 கிராம் நார்ச்சத்துக்கள், 2.9 கிராம் புரதம், கொழுப்பு 0 கிராம், சோடியம் 33.0 மைக்ரோகிராம், பொட்டாசியம் 359.1 மைக்ரோகிராம் உள்ளது.
வைட்டமின் ஏ 9.8 சதவீதம், வைட்டமின் பி6 11.3 சதவீதம், வைட்டமின் சி 30.5 சதவீதம், வைட்டமின் இ 1.1 சதவீதம் உள்ளது. கால்சியம் 5.1 சதவீதம், மெக்னீசியம் 6.7 சதவீதம், பாஸ்பரஸ் 5.0 சதவீதம், சிங்க் 7.2 சதவீதம், மாங்கனீஸ் 12.5 சதவீதம், அயோடின் 5.9 சதவீதம் உள்ளது.
புடலங்காயின் நன்மைகள்
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
சுவாசத்தை பலப்படுத்துகிறது.
பதற்றத்தைப் போக்குகிறது.
ஆசிட் எதிர்ப்பை குறைக்கிறது.
பிசிஓஎஸ் பிரச்னைகளைத் தீர்க்கிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
நீரிழிவு நோய் அறிகுறிகளைப்போக்குகிறது.
சருமத்தொற்றுகளை நீக்கி, பளபளப்பாக்குகிறது.
தலைமுடியை ஆரோக்கியத்தை அதிகரித்து பொடுகைப் போக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்