ஸ்னாக்ஸ் ரெசிபி : இப்படி ஒரு சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஸ்னாக்ஸ் ரெசிபி : இப்படி ஒரு சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்! இதோ ரெசிபி!

ஸ்னாக்ஸ் ரெசிபி : இப்படி ஒரு சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Mar 16, 2025 12:45 PM IST

ஸ்னாக்ஸ் ரெசிபி : இது ஒரு வித்யாசமான ஸ்னாக்ஸ் ரெசிபி. இதை செய்வதற்கு ரவை தேவைப்படும். ரவை கொழுக்கட்டை என்று இந்த ஸ்னாக்ஸை கூறலாம்.

ஸ்னாக்ஸ் ரெசிபி : இப்படி ஒரு சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்! இதோ ரெசிபி!
ஸ்னாக்ஸ் ரெசிபி : இப்படி ஒரு சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்! இதோ ரெசிபி! (blend with spices )

தேவையான பொருட்கள்

• ரவை – ஒரு கப்

• வெல்லம் – ஒரு கப்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• ஏலக்காய் – 2

• பொட்டுக்கடலை – அரை கப்

• வேர்க்கடலை – அரை கப்

• நெய் – தேவையான அளவு

செய்முறை

1. பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பல்ஸ் மோடில் அடித்துக்கொள்ளவேண்டும். அதிகம் பவுடராக இருக்கக்கூடாது. எனவே இரண்டு முறை பல்ஸ் மட்டுமே விட்டுக்கொள்ளவேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் அளவுக்கு கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் துருவிய தேங்காயையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

4. அடுத்து அதில் பொடித்த கடலை, பொட்டுக்கடலை கலவையை சேர்த்து, அடுத்து வெல்லப்பாகை ஊற்றி நன்றாக கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்தே கிளறவேண்டும்.

5. அடுத்து கிளறியதை ஆறவைத்துவிட்டு, சிறிய வடைகளாக தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். அதை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வைத்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.

இதை எண்ணெயில் வறுக்காததால், ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகும். இருமுறை வேகவைத்திருப்பதால், உடலுக்கும் நன்மையைத் தரும். ஆரோக்கியமான இந்த ஸ்னாக்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு செய்துகொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

குறிப்புகள்

எந்த கப்பில் ரவையை அளக்கிறீர்களோ அதே கப்பில்தான் அனைத்து பொருட்களையும் அளந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபி சுவையாக இருக்கும்.