Smelly Armpits : அக்குளில் வீசும் துர்நாற்றம்; விரட்டியடிக்க வேப்பிலை போதும்! பாட்டி வைத்தியத்தில் பலன்பெறுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Smelly Armpits : அக்குளில் வீசும் துர்நாற்றம்; விரட்டியடிக்க வேப்பிலை போதும்! பாட்டி வைத்தியத்தில் பலன்பெறுங்க!

Smelly Armpits : அக்குளில் வீசும் துர்நாற்றம்; விரட்டியடிக்க வேப்பிலை போதும்! பாட்டி வைத்தியத்தில் பலன்பெறுங்க!

Priyadarshini R HT Tamil
Jun 09, 2024 02:26 PM IST

Smelly Armpits : அக்குளில் வீசும் துர்நாற்றம்; விரட்டியடிக்க வேப்பிலை போதும் என்றால் நம்பமுடிகிறதா? பாட்டி வைத்தியத்தில் பலன் உள்ளது பாருங்கள்.

Smelly Armpits : அக்குளில் வீசும் துர்நாற்றம்; விரட்டியடிக்க வேப்பிலை போதும்! பாட்டி வைத்தியத்தில் பலன்பெறுங்க!
Smelly Armpits : அக்குளில் வீசும் துர்நாற்றம்; விரட்டியடிக்க வேப்பிலை போதும்! பாட்டி வைத்தியத்தில் பலன்பெறுங்க!

நீங்கள் முறையான சுகாதாரத்தை பேணவில்லையென்றால், உங்கள் அக்குளில் கடும் துர்நாற்றம் வீசும். நீங்கள் அன்றாடம் குளிப்பது உதவினாலும், உங்களுக்கு வேப்பிலைகளும் உதவும்.

நாம் சில உணவுகளை உட்கொள்வதாலும் உடலில் துர்நாற்றம் ஏற்படும். உங்கள் சருமத்தில் வியர்வையும், பாக்டீரியாக்களும் கலக்கும்போது, அது உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. 

வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளும் நம் துர்நாற்றத்துக்கு காரணமாகலாம். அந்து துர்நாற்றத்தை போக்க வேப்பிலை உதவும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அக்குள் துர்நாற்றத்துக்கான காரணங்கள் என்ன?

அக்குளில் உள்ள அப்போகிரைன் என்ற சுரப்பிகள், உங்கள் உடலில் கடும் துர்நாற்றம் வீசுக்கூடிய திக்கான புரதச்சத்துக்கள் நிறைந்த வியர்வையை சுரக்கம்.

நீங்கள் நல்ல சோப்பை பயன்படுத்தி நன்றாக குளிக்காவிட்டாலும், உங்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது.

பூண்டு, வெங்காயம், மசாலாக்கள் கலந்த உணவை நாம் சாப்பிடும்போதும், cங்கள் உடலில் கடும் துர்நாற்றத்தை வீசக்கூடிய வியர்வையை வெளியேற்றும்.

பூப்பெய்தும் காலங்கள், கர்ப்பம், மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கடும் வியர்வையும் துர்நாற்றத்துக்கு காரணமாகும்.

ட்ரிமெத்திலாமினுரியா என்பது உடலில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நிலை ஆகும்.

செயற்கை மற்றும் பாலியஸ்டர் உடைகள், இறுக்கமான ஆடைகள் உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வேப்பிலை எவ்வாறு உங்கள் அக்குள் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது?

வேப்பிலைகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதன் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும். இது உங்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்ஜை தொற்றையும் குணப்படுத்தும். சருமத்தில் உள்ள கழிவை நீக்கி, கூடுதல் பாக்டீரியா தொற்றை குறைக்கும்.

அக்குள் நாற்றத்தை போக்க வேப்பிலலையை எப்படி பயன்படுத்தவேண்டும்?

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலை மற்றும் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி 30 நிமிடங்கள் விடவேண்டும்.

பின்னர் சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.

வாரத்தில் இதை இருமுறை செய்யவேண்டும்.

வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை கலந்து அக்குளில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்.

வேப்பிலையை சுடுதண்ணீரில் கொதிக்கவைத்து குளிக்கலாம். இந்த தண்ணீரில் தினமும் குளிக்கலாம். வேப்பிலை சோப்புக்களை பயன்படுத்தலாம். வேப்பிலை தண்ணீரை பயன்படுத்தி அக்குளை கழுவலாம்.

வேம்பு, சந்தனம் மற்றும் மஞ்சள்

வேம்புப் பொடி, சந்தனப் பொடி, மஞ்சள் பொடி என அனைத்தையும் சேர்த்து பேஸ்டாக்கி அக்குளில் தடவவேண்டும். அது காய்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவேண்டும்.

இவற்றையெல்லாம் மாறி, மாறி வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யவேண்டும்.

வேப்பெண்ணெயை, வெளியில் தடவுவது பாதுகாப்பானது. ஆனால் நீங்கள் வேப்பெண்ணெயை, தேங்காய் எண்ணெயில் கலந்து சருமத்தில் தடவுவது, சருமத்தில் உள்ள எரிச்சலைப்போக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.