Sleep Problems : ‘தூக்கம் தூரமானதா?’ படுக்கச் செல்லும் முன் இந்த ஒரு பானம்! நிமிடத்தில் குழந்தை போல் உறக்கம் தழுவும்!
Sleep Problems : தூக்கம் தூரமானதா? உங்களுக்கு உறக்க கோளாறுகள் உள்ளதா? எனில், படுக்கச் செல்லும் முன் இந்த ஒரு பானம் மட்டும் பருகிவர நிமிடத்தில் குழந்தை போல் உறக்கம் தழுவும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உங்களால் சரியாக உறங்க முடியவில்லையா? இன்சோமேனியா என்ற உறக்கமின்மைய வியாதியால் அவதியுறுகிறீர்களா? அல்லது நீண்ட நேரம் உறங்கி எழுந்தாலும் சோர்வாக உணர்கிறீர்களா?
உங்களுக்கு அடுத்த நாள் இயல்பாக வேலை செய்யமுடியாமல் பணியின்போது அல்லது படிக்கும்போது தூங்கி வழிகிறீர்களா? இந்த ஒரு பானம் உங்களுக்கு உதவும். நீங்கள் பருகிய சில நொடிகளிலே குழந்தைபோல் அசந்து தூங்கிவிடுவீர்கள். இந்த பானத்தை தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1
ஆப்பிளில் உள்ள டிரிப்டோஃபென் என்ற அமினோ அமிலம், உங்கள் உடலில் செரோட்டினின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உறக்கத்தை முறைப்படுத்தும் ஹார்மோன் ஆகும். இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெரிகள் – 16
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. அமலும் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்தது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், உங்கள் உறக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கிறது. உங்கள் உடலை இயற்கையாக ரிலாக்ஸ் செய்கிறது.
செய்முறை
முழு ஆப்பிளையும், 6 ஸ்ட்ராபெரிகளையும் நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவேண்டும். பின்னர் அதனுடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவேண்டும். இந்த அளவு தண்ணீர் சேர்க்கும்போதுதான் அது நன்றாக அரைபட உதவியாகும். இதை நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு டம்ளரில் எஞ்சியுள்ள ஸ்ட்ராபெரிகளை நறுக்கி சேர்க்கவேண்டும். அதில் அரைத்த பழச்சாறை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அப்படியே இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பருகவேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் தேன் கலந்துகொள்ளலாம். ஆனால் அப்படியே பருகினாலும் இரண்டு பழங்களும் இனிப்பு சுவை நிறைந்ததுதான். இனிப்பாகத்தான் இருக்கும்.
இதை தினமும் இரவில் செய்து வந்தால் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். நீங்கள் அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்போது சுறுசுறுப்புடன் எழுவீர்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்