Sleep Disorder : உறக்கமின்மை எனும் அரக்கன்; தூக்கமும் கண்களை தழுவவேண்டுமா? – சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sleep Disorder : உறக்கமின்மை எனும் அரக்கன்; தூக்கமும் கண்களை தழுவவேண்டுமா? – சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க!

Sleep Disorder : உறக்கமின்மை எனும் அரக்கன்; தூக்கமும் கண்களை தழுவவேண்டுமா? – சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க!

Priyadarshini R HT Tamil
Jan 21, 2025 01:47 PM IST

இதோ உறக்கமின்மைக்கு எளிய தீர்வு தரும் சித்த மருத்துவர்.

Sleep Disorder : உறக்கமின்மை எனும் அரக்கன்; தூக்கமும் கண்களை தழுவவேண்டுமா? – சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க!
Sleep Disorder : உறக்கமின்மை எனும் அரக்கன்; தூக்கமும் கண்களை தழுவவேண்டுமா? – சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க!

ஒருவருக்கு எந்த அளவுக்கு உறக்கம் வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். எனினும், ஒருவருக்கு 7 முதல் 9 மணி நேர உறக்கம் என்பது கட்டாயம். சிலருக்கு குறைந்த கால இன்சோமேனியா ஏற்படும். இது சில நாட்கள் அல்லது வாரங்கள் மட்டுமே இருக்கும். இது மனஅழுத்தம் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளால் ஏற்படுகிறது. சிலருக்கு நீண்ட கால இன்சோமேனியா ஏற்படும். அது நாள்பட்ட இன்சோமேனியா என்று அழைக்கப்படுகிறது. இது மூன்று மாதங்களுக்கு மேல் கூட சிலருக்கு ஏற்படும். இன்சோமேனியா என்பது முக்கியமான பிரச்னையாகும். இது மற்ற நோய்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளால் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் உறங்காமல் தவிக்கவேண்டாம். சில வாழ்வியல் முறை மாற்றங்கள் கூட உங்களின் உறக்கமின்மை வியாதியைப் போக்கும் தன்மை கொண்டது.

அறிகுறிகள்

நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவிப்பது

இரவில் உறக்கத்தின் இடையில் விழித்துக்கொள்வது

அதிகாலையில் விரைவிலே விழித்துக்கொள்வது

நாள் முழுவதும் உறக்கக்கலக்கத்துடனும், சோர்வாகவும் இருப்பது

பயம், பதற்றம், நடுக்கத்துடன் இருப்பது

மறதி, நினைவிழப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவது, எதையும் கவனிக்காமல் விட்டுவிடுவது

விபத்துக்களை அதிகம் சந்திப்பது மற்றும் அதிக தவறுகள் செய்வது

உறங்கும்போது பல்வேறு மனக்கவலைகள் கொள்வது, மனஅழுத்தம் ஏற்படுவது

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

உறக்கமின்மை உங்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும்போது, நீங்கள் மருத்துவரை கட்டாயம் சந்திக்கவேண்டும். உங்கள் மருத்துவர் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து உங்களுக்கு தேவையான சிகிச்சையைக் கொடுப்பார். உங்களுக்கு உறக்கக் கோளாறுகள் இருந்தால், நீங்கள் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவீர்கள்.

இரவில் உறக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? குழந்தைப்பருவத்தில் எழுப்பும்போது, எழுந்திருக்கவே முடியவில்லையா? ஆனால் முதுமை பருவத்தில் தூக்கமே வருவதில்லையா? கவலை வேண்டாம் சித்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அனைவருக்கும் பயனுள்ள ஆரோக்கிய குறிப்புக்களை வழங்கி வருகிறார். அது வயதானவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் உறக்கமின்மை பிரச்னைகளை களைவதற்கு எளிய வழி ஒன்றை கற்றுக்கொடுத்துள்ளார். அது என்னவென்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

சடாமஞ்சரி

கசகசா

அமுக்கரா

செய்முறை

இந்த மூன்று பொருட்களையும் எடுத்து நன்றாக சுத்தம் செய்து தனித்தனியாகப்பொடித்து ஒன்றாகக் கலந்துகொள்ளவேண்டும். இதை தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னர் ஒரு டம்ளர் இதமான சூடுள்ள பாலில் கலந்து பருகவேண்டும்.

அப்படி பருகினால் போதும். உங்களுக்கு தூக்கம் நன்றானகவரும். காலையில் எழும்போதும் எவ்வித சோம்பல் உணர்வும் இன்றி உற்சாகமாக கண் விழிப்பீர்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.