Skin Glow : ஒரு வாரம் இரவில் இதை மட்டும் முகத்தில் தடவுங்கள்! கருந்திட்டுகள் நீங்கி முகம் ஜொலிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Glow : ஒரு வாரம் இரவில் இதை மட்டும் முகத்தில் தடவுங்கள்! கருந்திட்டுகள் நீங்கி முகம் ஜொலிக்கும்!

Skin Glow : ஒரு வாரம் இரவில் இதை மட்டும் முகத்தில் தடவுங்கள்! கருந்திட்டுகள் நீங்கி முகம் ஜொலிக்கும்!

Priyadarshini R HT Tamil
May 12, 2024 03:28 PM IST

Skin Glow : ஒரு வாரம் இரவில் இதை மட்டும் முகத்தில் தடவிப்பாருங்கள். முகம் தங்கம்போல் ஜொலிக்கும்.

Skin Glow : ஒரு வாரம் இரவில் இதை மட்டும் முகத்தில் தடவுங்கள்! கருந்திட்டுகள் நீங்கி முகம் ஜொலிக்கும்!
Skin Glow : ஒரு வாரம் இரவில் இதை மட்டும் முகத்தில் தடவுங்கள்! கருந்திட்டுகள் நீங்கி முகம் ஜொலிக்கும்!

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

முகத்தில் உள்ள கருந்திட்டுகள், மெலாஸ்மா, சன் டேன், முகப்பருக்கள் வந்து மறைந்தபின் வரும் கரும்புள்ளிகள், தழும்புகள், துவாரங்கள் என அனைத்தும் மறையும். அதற்கு நீங்கள் இந்த கிரீமை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை உங்கள் முகத்தில் இந்த கிரீமை தடவவேண்டும்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழத்தின் தோல் – 2

எந்த வகை வாழைப்பழத்தின் தோலை வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வாழைப்பழத்தோலில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. 

இது கரும்புள்ளிகள், தழும்புகள், கருந்திட்டுக்கள், மெலாஸ்மா ஆகிய சருமத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும். முகத்தை பளபளப்பாக்கும். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு – 1

உருளைக்கிழங்கில் உள்ள இயற்கை எண்சைம்கள், இயற்கை ப்ளீச்சிங்காக செயல்பட்டு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும் தன்மை கொண்டது. சருமத்தை பாதுகாக்கும்.

பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்

பச்சரிசி மாவு ஸ்கின் ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக உள்ளது. இறந்த செல்களை போக்குகிறது. கரும்புள்ளிகளை அகற்றும். சருமத்தை மிருதுவாக்கும்.

வைட்டமின் இ ஆயில் மாத்திரைகள் – 3

கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது

அல்லது

பாதாம் எண்ணெய்

செய்முறை

வாழைப்பழத்தின் தோல் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றி வரவேண்டும்.

பின்னர் ஆறவைத்து தண்ணீரை வடிகட்டி இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த பேஸ்டில் அரிசி மாவை சேர்க்க வேண்டும். வைட்டமின் இ ஆயில் மாத்திரைக்களில் உள்ள எண்ணெய் அல்லது பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன் சேர்க்கவேண்டும்.

இதை நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதை ஒரு டப்பாவில் அடைத்து, ஃபிரிட்ஜில்தான் வைத்து பயன்படுத்த முடியும்.

இதை உங்கள் முகத்தல் இரவு உறங்கச்செல்லும் முன் முகத்தில் தடவி காய்ந்தபின் கழுவிவிட்டு உறங்கச்செல்லவேண்டும்.

சோப்பு அல்லது லோஷன் பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவக்கூடாது. வெறும் தண்ணீரில் கழுவிவிட்டு, நன்றாக துடைத்துவிட்டு, நீங்கள் வழக்கமாக தடவும் ஏதேனும் ஒரு கிரீமை பூசிக்கொள்ளலாம் அல்லது மாய்சரைசர் பூசிவிட்டு, உறங்கச்செல்லலாம்.

இதை இரவு முழுவதும் வைத்தும் இருக்கலாம். ஆனால் இதில் பச்சரிசி மாவை சேர்த்திருப்பதால், உங்கள் சருமத்தை வறண்டு போக வைக்கும்.

இதை இரவு முழுவதும் வைத்துக்கொள்ள விரும்பினால், இதில் பச்சரிசி மாவை சேர்க்கக்கூடாது. மேலும் கருந்திட்டுகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் உபயோகிக்கவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.