Skin Care : சருமம் பளபளப்பாக வேண்டுமா? இதோ இந்த 5 உணவுகளை கட்டாயம் எடுக்கவேண்டும்!
Skin Care : சருமம் பளபளப்பாக வேண்டுமா? இதோ இந்த 5 உணவுகளை கட்டாயம் எடுக்கவேண்டும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்று சருமம். ஏனென்றால் மொத்த உடலையும் பாதுகாப்பது சருமம்தான். சருமத்தை நாம் பாதுகாக்க வேண்டும் வெளிப்புறத்தில் இருந்து அல்ல உள்புறத்தில் இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அதற்கு உதவும் குறிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது.
உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். சருமம் பளபளக்க நாம் வெளியில் இருந்து என்ன எடுத்துக்கொண்டாலும், உள்ளே எடுத்துக்கொள்ளும் உணவுதான் முக்கிய காரணமாகிறது. எனவே சரும அழகை பராமரிக்கு கீழே கொடுக்கப்பட்ட இந்த 5 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஃபேட்டி ஃபிஷ்
ஃபேட்டி ஃபிஷ் என்றால் கொழுப்பு நிறைந்த மீன்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். அவை சால மீன், நெத்தில் மீன், சூரை மீன், அயிலை மீன் ஆகியவை ஆகும். சால்மன் என்ற ஒரு வகை மீன் உள்ளது. அது நம் நாட்டு மீன் கிடையாது. வெளிநாட்டு கடல் பகுதிகளில் சிக்கக்கூடியது ஆகும். அதையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் உள்ள கொழுப்பு சருமத்தை பளபளப்பாக்கும்.
அவகேடோ
அவகேடோவில் வைட்டமின் இ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. நமது சருமப் பொலிவுக்கு வைட்டமின் இ மிகவும் முக்கியமானதாகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பெரிகள்
ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஷ்பெரி என அனைத்து வகை பெரி பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இது உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொலாஜென் உற்பத்தி சீரக இருக்கும்போதுதான் சருமம் பளபளப்பாகும். அதற்கு இந்த பெரி வகை பழங்கள் உதவுகின்றன.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிகிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் என்ற சத்து அதிகம் உள்ளது. இவையிரண்டும் சரும பளபளப்புக்கு உதவுகிறது.
கிரீன் டீ
கிரீன் டீயை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் சருமத்தில் பளபளப்பை அதிகரிக்கும். உங்கள் வெளிப்புற அழகை மேம்படுத்தும்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அன்றாடம் ஹெச்.டி தமிழ் உங்களுக்கு வழங்கி வருகிறது. எனவே இவற்றை பயன்படுத்தி பலன்பெற தொடர்ந்து எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்