அழகு குறிப்புகள்: பார்லர் செல்லாமல், பணம் செலவில்லாமல் பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த எளிய பேஷியல் போதும்
பார்லர் சென்று பணத்தை செலவழிக்காமல் வீட்டில் இருந்தபடியே முக பளபளப்பைப் பெறவதற்கான எளிய வழியாக நீராவி பேஷியல் இருந்து வருகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இயற்கையாகவும் பளபளப்பாக்குவதுடன்

ஆண்களை காட்டிலும் பெண்கள் சருமத்தின் அழகை பேனி பாதுகாக்க பல்வேறு வகைகளில் மெனக்கெடுகிறார்கள். பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பும் பலரும் பார்லர் சென்று பேஷியல், பிளீச்சிங் போன்ற அழகு குறிப்பு முறைகளை பின்பற்றுகிறார்கள். இவற்றால் உரிய பலனை பெறலாம் என்றாலும், அவை நீண்ட காலம் நீடிப்பது என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இதுமட்டுமல்லாமல் சரும் அழகை தக்கவைக்க பல்வேறு வீதமான கிரீம்கள் மற்றும் லோஷன்களும் பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் சருமத்தை பிரகாசமாகவும், பளபளபாகவும் காட்டினாலும் அவற்றை தக்க வைக்காது. மேலும், இதுபோன்ற அழகு குறிப்பு முறைகளை பின்பற்றுவதால் பணத்தையும் செலவழிக்க நேரிடலாம்.
நீராவி பேஷியல்
பார்லருக்குச் செல்லாமல், எந்த செலவும் இல்லாமல் உங்கள் முகத்தை வீட்டிலேயே நீராவி பேஷியல் செய்வதன் மூலம் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை கொண்டுவரலாம். சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது ஒரு எளிதான மற்றும் இயற்கையான வழியாகும். நீராவி பேஷியல் சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக்குகிறது.
நீராவி பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
துளைகளை சுத்தம் செய்கிறது: நீராவி பேஷியல் சருமத்தின் துளைகளை திறந்து உள்ளே இருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவை இறந்த செல்களிலிருந்து வெளியேறுகின்றன. இதன் மூலம் சருமம் ஆழமாக ஆரோக்கியமாகி இளமையான தோற்றத்தை பெற உதவும்.
சருமத்தை பளபளப்பாக்குதல்: நீராவி பேஷியல் முகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது. சருமத்தின் மீது நீராவி உள்ளே சென்ற பிறகு, தோல் மிகவும் புத்துணர்ச்சி அடைகிறது. இதன் மூலம் பிரகாசமாக மாறுகிறது.
முகப்பருவுக்கு நிவாரணம்: முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் உள்ளவர்களுக்கு நீராவி பேஷியல் மிகவும் நன்றாக வேலை செய்கிறது. நீராவியில் முகத்தை காண்பிப்பதால் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது. துளைகளில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்து, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஈரப்பதமாக்குதல்: சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து, வறட்சி மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது. ஈரப்பதம் மற்றும் சுழற்சியை மேம்படுத்திசருமத்தை மென்மையாக்குகிறது. சுருக்கங்களை குறைக்கிறது.
வயதான தோற்றத்துக்கு எதிர்ப்பு: நீராவி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறது. நீராவியில் ஈடுபடுதல் வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது. இதனால் சுருக்கங்களும் குறைகின்றன.
மன அழுத்தத்தை குறைக்கிறது: முகத்தை நீராவியில் ஈடுபடுத்துதல் தசைகளை தளர்த்த உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் பதற்றத்தைக் குறைக்கிறது. நீராவியில் ஈடுபடுதல் உடலையும் மனதையும் தளர்த்துகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிறந்த வழியாக உள்ளது.
மேலும் படிக்க: வீட்டிலேயே சுலபமாக தக்காளி பேஷியல் செய்யும் முறை
நீராவி ஃபேஷியல் செய்வதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
- நீராவி ஃபேஷியல் செய்வதற்கு முன் உங்கள் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அவற்றில் துளசி, வேம்பு அல்லது கிரீன் டீ சேர்க்கவும்.
- தண்ணீர் கொதித்து நிறம் மாறியதும், அடுப்பை அணைத்து நீராவியை சருமத்தில் பட வைக்கவும். நீராவி பிடிக்கும்போது உங்கள் முகத்துக்கும் பானைக்கும் இடையில் குறைந்தது 8 முதல் 10 அங்குல தூரத்தை பராமரிக்கவும்.
மேலும் படிக்க: வறண்ட சருமத்தை மென்மையாக்கும் அழகு குறிப்புகள்.. தினமும் செஞ்சா நல்ல பலனை பெறலாம்
- இந்த வழியில் 5 முதல் 10 நிமிடங்கள் முகத்தில் நீராவியை பட வைத்த பிறகு, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் உங்கள் முகத்தில் மாய்ஸ்சரைசரையும் தடவலாம்.
- நீராவி ஃபேஷியலை அதிக நேரம் செய்யும் போது. நீண்ட நேரம் நீராவி பிடிப்பது சருமத்தை வறட்சியடையச் செய்யும்.
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்

டாபிக்ஸ்