Skin Care: சரும வறட்சியை நீக்க வேண்டுமா? இதை மட்டும் தவறாமல் செய்தால் போதும்
குளிர் காலத்தில் சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்க முடியாமல் வறட்சி அடைவது இயல்புதான். இந்த நேரத்தில் மாய்டரைசர் இல்லாமல் வேறு எந்தெந்த வழிகளில் சரும வறட்சி போக்கலாம் என்பதை பார்க்கலாம்
குளிர் காலத்தில் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் வறட்சி காரணமாக சருமத்தில் வறட்சி ஏற்படுவதுண்டு. இதனால் தோல்களில் அரிப்பு, குறிப்பாக பாதங்களில் தோல் உறிதல் போன்ற பிரச்னை ஏற்படும்.
சரும வறட்சியை போக்குவதற்கும், உடனடி தீர்வாகவும் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தகூடிய பொருளாக மாய்டரைசர் இருந்து வருகிறது. ஆனால் மாய்டரைசர் இல்லாமல் வேறு வழிகளிலும் சரும வறட்சியை போக்கலாம். அந்த வகையில் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் சில பொருள்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஓட்மீல்ஸ்
ஓட்மீலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை எரிச்சலை தணித்து, அரிப்புகள் ஏற்படுவதை தடுக்கின்றன. வறண்ட சருமம் உள்ளவர்கள், ஓட்ஸ் குளியல் எடுத்துக்கொள்வதன் மூலம் நன்மை பெறலாம். ஓட்மீலை நன்றாக பொடியாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து சருமத்தில் வறட்சி நிறைந்த பகுதிகளில் தடவி பின் கழுவ வேண்டும்.
ஈரப்பதமூட்டி
ஹூயூமிடிபையர் என்று அழைக்கப்படும் ஈரப்பதமூட்டியை பயன்படுத்தலாம். வறண்ட காற்று சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி வறட்சியை ஏற்படுத்தலாம். வீட்டில் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விளைவை குறைக்கலாம். இதனால் சருமமும் ஈரப்பதத்தை இழக்காமல் இருக்கும்
தேங்காய் எண்ணெய்
சரும செல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிரப்பி ஈரப்பதமாக்கி, மென்மையாக்கும் பண்புகள் தேங்காய் எண்ணெய்யில் உள்ளன. உணர்திறன் மிக்க சருமத்தில் தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் அதில் இடம்பிடித்திருக்கும் ஹைட்ரேட் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
மினரல் ஆயில்
பெட்ரோலியம் ஜெல்லி அல்லது மினரல் ஆயில் சருமத்தில் பாதுகாப்பு அடுக்கை வைத்து, சருமத்தின் கீழ் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. வறண்ட, எரிச்சல் உள்ள சருமத்துக்கு நீரேற்றம் செய்து மென்மையாக்க இதைப் பயன்படுத்தலாம்
பெர்ரி பழங்கள், பருப்பு உணவுகள்
சில உணவுகள் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகின்றன. ப்ளூபெர்ரி, தக்காளி, கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு போன்ற உணவு வகைகள் சரும வறட்சியை போக்கி, மீள் உருவாக்கம் செய்கிறது.
மீன் வகைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, நீரேற்றமாக வைத்திருக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக உள்ளன. வறண்ட சருமத்தைத் தவிர்க்க சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மத்தி மீன்களை சாப்பிடலாம்
டாபிக்ஸ்