அழகு குறிப்புகள்: ப்யூட்டி பார்லர் வேண்டாம்.. மூன்று பொருள்கள் போதும்.. வீட்டிலேயே ஒளிரும் சருமத்தை பெற இயற்கை ஃபேஷியல்
ப்யூட்டி பார்லர் செல்லாமல் உங்கள் சருமத்தை பளபளப்பாக்கலாம் பல்வேறு வழிகளை வீட்டில் இருந்தபடியே கையாளலாம். குறிப்பாக துளிசி, வேம்பு, க்ரீன் டீ வைத்து இயற்கையான ஃபேஷியல் முயற்சி செய்யலாம். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பளபளப்பாக்குவதுடன் நல்ல பலனையும் தரும்.ு

வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் இல்லத்து அரசிகளை வரை அனைவருமே தங்களது சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் முக அலங்காரம் மற்றும் ப்ளீச்சிங் போன்ற அழகு குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள். இவை நன்மை பயக்கும் என்றாலும், அவற்றிக்கென குறிப்பிட்ட தொகையும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல் சருமத்தைப் பராமரிக்க பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவாகவும் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதும் நல்லதல்ல. மேலும், இதுபோன்ற பொருட்களை வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும்.
சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவு ஆக்குவதற்கு ப்யூட்டி பார்லர் சென்றால் குறைந்தது ரூ. 1000 வரை செலவு செய்ய வேண்டும். நாம் தேர்வு செய்யும் ஃபேஷியல் வகைககளுக்கு ஏற்ப விலைகளில் ஏற்றமும் இருக்கும். ஆனால் பணம் செலவு இல்லாமல் ப்யூட்டி பார்லர் சென்று முகத்தை பொலிவு பெற வைக்கு ஃபேஷியலை எளிதாக வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு சிறிது அளவு துளசி இலைகள், வேப்ப இலைகள் மற்றும் பச்சை தேயிலை ஆகியவை போதுமானது. இயற்கையான ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
துளசி இலைகள், வேப்ப இலைகள் மற்றும் கிரீன் டீ ஆகியவற்றை கொண்டு, உங்கள் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைப் பெறலாம். சருமத்தை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது ஒரு எளிதான மற்றும் இயற்கையான வழி. நீராவி ஃபேஷியல் சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, தோல் இயற்கையாகவே பளபளப்பாகிறது.
துளசி மற்றும் வேம்பு ஃபேஷியல் நன்மைகள்
டீ குடித்த பிறகு நீங்கள் விட்டுச் சென்ற கிரீன் டீ பைகள், துளசி இலைகள் மற்றும் வேப்ப இலைகள் போன்றவற்றை மென்மையான பேஸ்டாக உருவாக்கி, பின்னர் இந்த கலவையை வைத்து ஃபேஷியல் செய்ய வேண்டும். இந்த ஃபேஷியல் செய்வதன் மூலம் சருமத்துக்கு பல நன்மைகள் உள்ளன.
சருமத்தை ஒளிர்தல்: இந்த ஃபேஷியல் முகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது. இந்த நீராவி சருமத்தை அடைந்த பிறகு, தோல் மிகவும் புத்துணர்ச்சியடைகிறது. இதன் மூலம் சருமம் பளபளப்பு பெறுகிறது.
முகப்பருவைக் குறைத்தல்: முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் உள்ளவர்களுக்கு நீராவி ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக உங்கள் முகத்தில் தடவினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. முகத்தின் துளைகளில் உள்ள பாக்டீரியாக்களை இவை சுத்தம் செய்கின்றன. அத்துடன் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகின்றன.
ஈரப்பதமாக்குதல்: சருமத்தை ஈரப்பதமாக்குவதன் மூலம் வறட்சி மற்றும் அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தை மென்மையாக்குவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்கிறது.
மேலும் படிக்க: இயற்கை பளபளப்பை பெற உதவும் சப்போட்டா ஃபேஸ் மாஸ்க்
வயதான தோற்றத்தை தடுப்பது: கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஃபேஷியல் செய்த பிறகு நீராவி போட மறக்காதீர்கள். இதை செய்வதால் சுருக்கங்களைக் குறைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தவிர்க்கிறது.
மன அழுத்தத்தை குறைப்பது: முகத்தில் ஃபேஷியல் செய்த பிறகு, தசைகள் தளர்வு அடைகிறது. இதனால் சருமத்தில் உள்ள பதற்றம் குறைகிறது. நீராவி, உடலையும் மனதையும் தளர்த்தும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க இது சிறந்த வழியாக உள்ளது.
துளசி, வேம்பு, க்ரீன் டீ ஃபேஷியல் செய்யும் முறை
இந்த ஃபேஷியல் செய்வதற்கு முன், உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் துளசி இலைகள், வேப்பிலைகள் மற்றும் கிரீன் டீ ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் அறைத்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்குங்கள்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் விட்டுவிட்டு நன்கு கழுவவும்.
பின்னர் தண்ணீரை கொதிக்க வைத்து உங்கள் முகத்தை நீராவி போடவும். நீராவி உங்கள் முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் பட வேண்டும். இதன் பின்னர், குளிர்ந்த நீரில் கழுவவும், பின்னர் உங்கள் முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
இயற்கையான முறையில் சிறிது நேரத்தில் உங்கள் முகம் பிரகாசமாகி ஜொலிக்கும்
.

டாபிக்ஸ்