Skin Care : குழந்தைபோல் உங்கள் சருமமும் மிருதுவாக இருக்கவேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care : குழந்தைபோல் உங்கள் சருமமும் மிருதுவாக இருக்கவேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்!

Skin Care : குழந்தைபோல் உங்கள் சருமமும் மிருதுவாக இருக்கவேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Jul 27, 2024 12:10 PM IST

Skin Care : குழந்தைபோல் உங்கள் சருமமும் மிருதுவாக இருக்கவேண்டுமெனில், அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். இதை வைத்து என்ன செய்ய முடியும் பாருங்கள்.

Skin Care : குழந்தைபோல் உங்கள் சருமமும் மிருதுவாக இருக்கவேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்!
Skin Care : குழந்தைபோல் உங்கள் சருமமும் மிருதுவாக இருக்கவேண்டுமா? அதற்கு இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்!

உங்கள் உடலின் வெப்ப நிலையை முறையாக பராமரிக்கிறது. சருமத்தில் உள்ள நரம்புகள் சூடு மற்றும் குளிர் ஆகிய உணர்வுகளை உணர உதவுகிறது.

உங்கள் சருமத்துடன் தலைமுடி, நகங்கள், எண்ணெய் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் என அனைத்தும் இணைந்துள்ளன. உங்கள் சருமத்தின் முதல் அடுக்கு எபிடெர்மிஸ், நடு அடுக்கு டெர்மிஸ் மற்றும் கீழ் அடுக்கு அல்லது கொழுப்பு அடுக்கு ஹெப்போடெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது.

எப்பிடெர்மிஸ்தான் உங்கள் உடலை பாதுகாக்கிறது. உங்கள் உடலில் கிருமிகள் புகுந்து ரத்தத்தில் கலந்து தொற்றுக்களை ஏற்படுத்திவிடாமல் தடுக்கிறது. மழை, வெயிலில் இருந்தும் சருமத்தை காக்கிறது. 

புதிய சரும செல்களை தேவையானபோது உருவாக்குகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மணடலமாக செயல்டுகிறது. கிருமிகளையும், தொற்றுகளையும் எதிர்த்து போராட உதவுகிறது. சருமத்துக்கு தேவையான நிறத்தைக் கொடுக்கிறது. 

எபிடெர்மிஸ்ஸில் உள்ள மெலனின்கள்தான் உங்கள் தலைமுடி, கண்கள் மற்றும் சருமத்தின் நிறத்தை முடிவுசெய்கிறது. அதிக மெலனின் உள்ளவர்களின் சருமம் கருப்பாகவும், எளிதில் நிறம் மாறக்கூடியதாகவும் உள்ளது.

டெர்மிஸ்தான் சருமத்தின் தடிமனை நிர்ணயிக்கிறது. இதில் கொலாஜென் மற்றும் எலாஸ்டின் உள்ளது. கொலாஜென்தான் சரும செல்களை வலுவாக்குகிறது. டெர்மிஸ் மற்றும் எலாஸ்டினில் உள்ள புரதம் சருமத்துக்கு நெகிழ்தன்மைய வழங்குகிறது. சருமத்தில் முடிகள் வளர காரணமாகிறது. 

டெர்மிஸில் உள்ள நரம்புகள்தான் சூடு, அரிப்பு, எரிச்சல் என உணர்திறன்களைக் கொண்டுள்ளது. வலியை உணரவும் வைக்கிறது. சருமத்துக்கு தேவையான எண்ணெயை உற்பத்தி செய்கிறது. வியர்வையையும் உருவாக்குகிறது. சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

ஹைப்போடெர்மிஸ்சில் உள்ள கொழுப்புகள், தசைகள் மற்றும் எலும்பை காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. விபத்துக்களின்போது இதன் உதவி பெரியது. எலும்பு மற்றும் தசைகளுடன் சருமத்தை இணைக்கிறது. 

நடுப்பகுதியில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள், உடல் முழுவதுடனும் சருமத்தை இணைக்கிறது. இந்தப்பகுதியில் கொழுப்பு அதிகம் இருக்கும்போது உங்கள் உடல் வெப்பம் மற்றும் குளிரை தாங்குகிறது.

சருமத்தை வெளியில் இருந்து பராமரிப்பதால் அது மேலும் பளபளக்காக குழந்தையின் பட்டு சருமம்போல் மின்னுகிறது. மேலும் உடலுக்கு உள்ளேயும் அதற்கான ஊட்டத்தை நீங்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டும். உங்கள் சருமத்தின் பொலிவை மேலும் அதிகரிக்கும் ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வாசலின் – 2 டேபிள் ஸ்பூன்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெய் – 2 ஸ்பூன்

(இந்த எண்ணெய் உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. உங்களுக்கு வயோதிக தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது)

கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

(தெங்கும் சருமத்தை இறுக்கமாக்கும் தன்மை கற்றாழை ஜெல்லுக்கு உள்ளது)

செய்முறை

வாசலின், குழந்தை எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் என அனைத்தையும் நன்றாக கலக்கவேண்டும். நன்றாக கலந்து அதை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். 

இதை தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் உங்கள் சருமத்தில் பூச வேண்டும். பூசினால் உங்கள் சருமம் பளபளப்பாகும். இதை தினமும் கட்டாயம் இரவில் செய்யவேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.