அழகு குறிப்புகள்: உடலுக்கு மட்டுமல்ல சருமத்துக்கும் நன்மை தரும் பழம்.. எப்படி பயன்படுத்தலாம்? என்னென்ன நன்மைகள்
உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சருமத்துக்கும் அவகோடோ பழம் பல்வேறு நன்மைகளை தருகின்றன. வயதான தோற்றத்தை தடுப்பது மற்றும் பொலிவான தோற்றத்தைப் பெறுவது வரை அவகோடா பழத்தை உங்கள் அழகுமுறை பராமரிப்பில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடா இதய ஆரோக்கியம், எடை இழப்பு என உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான முக்கிய நன்மைகளை தருகிறது. உடல் ஆரோக்கியத்தை போல் உங்களின் சரும ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாத்து முக அழகை தக்க வைக்க உதவுகிறது. இந்த பழத்தை ஃபேஸ் பேக் வடிவில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கலாம், அதே சமயம் பிரகாசத்தையும், மென்மையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. சரும நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க செய்யும் அவகோடா, முகத்தில் தோன்றும் வயதான அறிகுறிகள் ஏற்படுவதை தடுக்கிறது.
சருமத்தில் எந்தவொரு பக்க விளைவுகளையும் தவிர்க்க இந்த பழத்தை சரியான பொருட்களுடன் இணைந்து பயன்படுத்துவது மிக முக்கியம். அவகோடா பழத்தை சருமத்துக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அதன் மூலம் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை பார்க்கலாம்
சருமத்துக்கு அவகோடோ பழத்தால் கிடைக்கும் நன்மைகள்
சருமம் மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கும், சருமத்தின் சிறப்பியல்புகளை மேம்படுத்தவும் இந்த அவகோடா பழம் பயன்படுகிறது. அவகேடோவின் தோல் அல்லது அதன் எண்ணெய்யை கூட பயன்படுத்தலாம்.
சரும நெகிழ்ச்சித்தன்மை: சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது அவகோடா பழம். எட்டு வார காலத்துக்கு தினமும் பழத்தை உட்கொள்வது, குறிப்பாக நெற்றியில் உறுதியை கணிசமாக அதிகரிக்கிறது என்று ஜர்னல் ஆஃப் காஸ்மெடிக் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
வயதான தோற்றத்தை தடுக்கிறது: அவகேடோ தோலில் இருந்து தயாரிக்கப்படும் சாறுகள் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டு கொண்டவையாக உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சருமத்துக்கு உதவுகிறது. இதன் மூலம் வயதான மற்றும் தோல் சேதமடைவது தடுக்கப்படுகிறது
சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது: அவகோடோ தோல் சாறுகள் ஸ்டேஃபிளோகோகஸ் போன்ற சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. இது சுத்தமான, ஆரோக்கியமான தோல் மேற்பரப்புகளை பராமரிக்க உதவுகிறது.
சருமத்துக்கு அவகேடோவை எவ்வாறு பயன்படுத்துவது?
சரும அழகை பராமரிக்கும் வழக்கத்தில் அவகோடாவை சேர்க்க சில எளிய வழிகள் இதோ
மேலும் படிக்க: அழகு குறிப்புகள்:உருளைக்கிழங்கு சாறு மாஸ்க் செய்வது எப்படி?
அவகேடோ மற்றும் ஓட்ஸ்
இந்த கலவை லேசான உரித்தல் மாஸ்க் ஆக செயல்படுகிறது. பழுத்த அவகேடோ அரை பழம் எடுத்து, அதனுடன்
ஒரு டேபிள் ஸ்பூன் நன்றாக அரைத்த ஓட்ஸ், ஒரு டேபிள்ஸ்பூன் தேக்கரண்டி தேன் (விரும்பினால்) எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவகேடோவை மசித்து, ஓட்ஸில் கலந்து, தேவைப்பட்டால் கூடுதல் ஈரப்பதத்துக்காக சிறிது தேன் சேர்க்கலாம். இந்த கலவையை வட்ட வடிவில் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து, 10 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இது லேசான உரித்தலாக செயல்படுகிறது. சருமத்தை ஈரப்பதமாக்கி அழுக்குகளை அகற்ற உதவுகிறது.
அவகேடோ மற்றும் வாழைப்பழம்
சருமத்தில் நீரேற்றத்தை அதிகரிக்கும் இந்த கலவை செய்ய அரை பழுத்த அவகேடோ, அரை வாழைப்பழம் எடுத்துகொள்ள வேண்டும். இரண்டு பழங்களையும் மென்மையான பேஸ்டாக நன்கு பிசைந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த கலவை பொதுவாக சூரிய ஒளிக்கு எதிராக இதமளிக்கும். மேலும் தூசுகளை நீக்கி, ஈரப்பதம் அளவை சமப்படுத்த உதவும்.
அவகேடோ மற்றும் கற்றாழை
இயற்கையான வைட்டமின் ஈ ஆக செயல்படும் இந்த கலவை தயார் செய்ய அரை அவகோடா, 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அவகேடோவை மசித்து, கற்றாழை ஜெல்லுடன் கலந்து, விரும்பினால் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்த்து, இந்த கலவையை மெதுவாகப் பூசி, 10 முதல் 15 நிமிடங்கள் கழித்துகுளிர்ந்த நீரில் கழுவவும். இந்த கலவை சருமத்தில் வறண்ட பகுதிகளை குளிரூட்டுகிறது. வறட்சியை நிவர்த்தி செய்யப் பயன்படுகிறது.
அவகேடோ மற்றும் வெள்ளரி
டோனிங் மாஸ்க் போல் செயல்படும் இந்த கலவையை செய்ய அரை பழுத்த அவகேடோ, ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மென்மையான நிலைத்தன்மையை உருவாக்க இந்த கலவையை நன்கு கலக்கவும்.
பின்னர் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர், குளிர்ந்த நீரில் கழுவவும்.
வெள்ளரிக்காய் அதன் குளிர்ச்சி மற்றும் லேசான டோனிங் பண்புகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக தோல் பதனிடுதல், அடிக்கடி சூரிய ஒளி அல்லது வெப்ப வெடிப்புகளை அனுபவிப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அவகேடோவின் ஆரோக்கியமான லிப்பிடுகள் சருமத்தின் தடையை ஆதரிக்கும்
எனவே, வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துதல், உங்கள் சருமத்தை தெளிவாக்குதல் அல்லது நன்கு நீரேற்றமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகள் அவகோடா பழத்தால் இருக்கிறது. இருப்பினும், சிறந்த முடிவுகளுக்கு சமமான பயனுள்ள பொருட்களுடன் அதை இணைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வதும் நல்லது.
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்

டாபிக்ஸ்