Dry Cough : வறட்டு இருமல், வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக சிங்கிள் டிரக் தெரபி – மருத்துவர் கூறுவது என்ன?
வறட்டு இருமல், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக வேண்டுமெனில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சித்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

வறட்டு இருமல், வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக சிங்கிள் டிரக் தெரபி – மருத்துவர் கூறுவது என்ன?
வறட்டு இருமல்
வறட்டு இருமல் வரும்போது, அதில் சளி இருக்காது. ஏனெனில் அதில் சளி நுரையீரல் மற்றும் காற்று வழிகளில் இருக்காது. அதனால் இருமும்போது எதுவும் வராது. சளி இல்லாதது அதிக இருமலை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்
வறட்டு இருமல் வரும்போது உங்களுக்கு தொண்டையில் எரிச்சல் மற்றும் கரகரப்பு ஏற்படும். எனவே அதை நீங்கள் சரிசெய்துகொள்ள அடிக்கடி இருமுவீர்கள். கடுமையான இருமும்போது காற்று உள்ளே புகுந்து தொண்டையில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் தொண்டை வறண்டு தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஏற்படும்.
வறட்டு இருமல் ஏற்பட காரணங்கள்
அலர்ஜி, ஆஸ்துமா, வேதிப்பொருட்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தும் காற்றை சுவாசிப்பது.