'டிஃபனுக்கு பன்னீர் புல்காவை இப்படி செய்து சாப்பிடுங்க’: எளிய படிப்படியான வழிமுறைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  'டிஃபனுக்கு பன்னீர் புல்காவை இப்படி செய்து சாப்பிடுங்க’: எளிய படிப்படியான வழிமுறைகள்

'டிஃபனுக்கு பன்னீர் புல்காவை இப்படி செய்து சாப்பிடுங்க’: எளிய படிப்படியான வழிமுறைகள்

Marimuthu M HT Tamil Published May 16, 2025 12:31 AM IST
Marimuthu M HT Tamil
Published May 16, 2025 12:31 AM IST

புல்காவை ஒரு தட்டில் வைத்து, மையப் பகுதியில் தயிர் சிறிது தடவிவிட்டு, அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி பன்னீர் ஸ்டஃப்பிங்கை பரப்பவும். விருப்பப்பட்டால் சிறிது உப்பு, சாட் மசாலா தூவலாம். பின் புல்காவை ரோல் போல சுருட்டவும். சுவையான பன்னீர் புல்கா ரெடி.

'டிஃபனுக்கு பன்னீர் புல்காவை இப்படி செய்து சாப்பிடுங்க’: எளிய படிப்படியான வழிமுறைகள்
'டிஃபனுக்கு பன்னீர் புல்காவை இப்படி செய்து சாப்பிடுங்க’: எளிய படிப்படியான வழிமுறைகள்

இந்த பன்னீர் புல்கா ரோல் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு ஒரு சிறந்த உணவு ஆகும். இதில் காரமும், சத்தும் சேர்ந்து இருப்பதால் சாப்பிடுவதில் மன நிறைவும் உடலுக்குச் சத்தும் கிடைக்கும். புல்கா எண்ணெய் அல்லது நெய் இல்லாமல் சுடப்படும் ரொட்டி என்பதால், இந்த ரொட்டியில், அதிக கொழுப்புச்சத்து இருப்பதில்லை.

பன்னீர் புல்கா செய்யத்தேவையான பொருட்கள்:

புல்கா மாவுக்காக:

கோதுமை மாவு – 2 கப்,

உப்பு – தேவையான அளவு,

தண்ணீர் – தேவைக்கேற்ப,

எண்ணெய் – தேவையில்லை (விருப்பத்திற்கு ஒரு சொட்டு சேர்த்துக் கொள்ளலாம்)

பன்னீர் ஸ்டஃப்பிங்கிற்காக:

பன்னீர் – 200 கிராம் (நன்கு நுரைபோல் தேய்த்தது);

வெங்காயம் – 1 (நறுக்கியது),

தக்காளி – 1 (நறுக்கியது),

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது),

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்,

சாட் மசாலா – அரை டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

கொத்தமல்லி – சிறிதளவு நறுக்கியது,

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (ஸ்டஃப்பிங்கிற்கு மட்டும்)

வெண்ணெய் – விருப்பத்திற்கு,

தயிர் – சிறிதளவு (ரோலுக்கு நன்கு சுவை தர)

பன்னீர் புல்கா செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவுடன் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையவும். இதனை ஈரத் துணியால் மூடி 20 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.

அடுத்து, ஒரு வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுதும் பச்சை மிளகாயினையும் வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வெந்ததும், தக்காளி சேர்க்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். தக்காளி நன்கு குழைந்து கிரேவி போல ஆனதும், தேய்த்த பன்னீரை சேர்த்து கிளறவும். சற்று வதங்கிய பின் சாட் மசாலா மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். ஸ்டஃப்பிங் தயார்.

அடுத்து, தனியாக ஒதுக்கி வைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மென்மையான சப்பாத்தியாக வேகமாகத் தட்டவும். தோசைக்கலையை நன்கு சூடாக்கி, ஒவ்வொன்றாக புல்காவை வைத்து, இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். மேலே எண்ணெய் அல்லது நெய் தடவத் தேவையில்லை.

சுட்ட புல்காவை ஒரு தட்டில் வைத்து, மையப் பகுதியில் தயிர் சிறிது தடவிவிட்டு, அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி பன்னீர் ஸ்டஃப்பிங்கை பரப்பவும். விருப்பப்பட்டால் சிறிது உப்பு, சாட் மசாலா தூவலாம். பின் புல்காவை ரோல் போல சுருட்டவும்.

தற்போது சுவையான பன்னீர் புல்கா ரெடி. பன்னீர் புல்காவை புதினா சட்னியுடன் தொட்டுச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற உணவு இதுவாகும்.

பன்னீர் புல்கா என்பது பாரம்பரிய புல்காவுக்கு சுவையான ஒரு மாற்று மட்டுமல்ல, அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான புரதம், சத்துக்களை வழங்கும் ஒரு முழுமையான உணவும்கூட ஆகும். இது வீட்டில் எளிதாகச் செய்யக்கூடியதும், ஆரோக்கியமானதும் ஆகும். மேலும் இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுமான ரொட்டி ரோல் வகையாகும்.