ஆரோக்கிய உணவுகள்: சூப் முதல் சாலட் வரை.. அனைவருக்கும் பிடித்தமான கேரட்டை வைத்து ருசியான உணவுகள்
குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்திருக்கும் கேரட் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்த தேவையில்லாமல் சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையிழப்புக்கு உதவுகிறது. கேரட்டை வைத்து பல்வேறு விதமான ஆரோக்கியம் மிக்க, உடல் எடை இழப்புக்கு உதவும் ரெசிபிக்கள் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

பசி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிலருக்கு உணவு மீதான ஏக்கம் என்பது எப்போதுமே இருக்கும். இதுபோன்ற சமயங்களில் கிடைத்ததை சாப்பிடுவதும், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதையும் கடைப்பிடிப்பது வேறு சில பிரச்னைகள் அல்லது உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.
எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பை தடுக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாக கேரட் உள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. இவை வயிறு நிரம்பிய திருப்தி உணர்வை தருவதுடன், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்துக்கும் நன்கு உதவுகிறது. சுவையில் எவ்வித சமரசமும் இல்லாமல், உடல் எடையை குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய கேரட் ரெசிபிக்களை பார்க்காம். வண்ணமயமான சாலடுகள் மற்றும் சூப்கள் கேரட்டை வைத்து சில ஆரோக்கியமான உணவுகள் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்
கேரட் மற்றும் இஞ்சி பானம்
கேரட் மற்றும் இஞ்சி கலவையில் தயார் செய்யப்படும் இந்த பானம் சிறந்த நச்சுநீக்கி பானமாக செயல்படுகிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை இவை வெளியேற்றுகின்றன. இந்த பானம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
கேரட் - 3 (தோல் நீக்கி நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - அரை கப்
செய்முறை
கேரட் மற்றும் இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து மென்மையாகும் வரை கலக்கவும். இந்த நீர் ஆறிய பிறகு அதை வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து, இலவங்கப்பட்டை தூள் தூவவும். அவ்வளவு தான் இயற்கையான நச்சுநீக்கி பானம் தயார்
எலுமிச்சை சாறு கேரட் சாலட்
தேவையான பொருட்கள்
துருவிய கேரட் - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
எள் விதைகள் - 1/2 டீஸ்பூன்
உப்பு மற்றும் மிளகு - சுவைக்கு
செய்முறை
ஒரு கிண்ணத்தில், துருவிய கேரட், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும்.
உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கிளறி, கூடுதல் மொறுமொறுப்புக்காக எள் விதைகளால் அலங்கரிக்கலாம். அவ்வளவுதான் எளிதான கேரட் சாலட் தயார்.
மேலும் படிக்க: உங்கள் கண்களை காக்ககூடிய ஆரோக்கிய உணவுகள்
வறுத்த கேரட் சூப்
தேவையான பொருட்கள்
கேரட் - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 2 பல்
காய்கறி குழம்பு - 2 கப்
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு மற்றும் மிளகு - சுவைக்கு ஏற்ப
அரைத்த மஞ்சள் - 1/2 அங்குல துண்டு
அரைத்த சீரகம் -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - அலங்காரத்துக்கு
200 டிகிரி செல்சியஸில் அடுப்பில் ஆலிவ் எண்ணெயுடன் கேரட், வெங்காயம் மற்றும் பூண்டை 20 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த காய்கறிகளை காய்கறி குழம்புடன் மென்மையாகும் வரை கலக்கவும்.
பின் இந்த சூப்பை சூடாக்கி, தாளிக்கவும். அவ்வளவுதான் சுடச்சுட சுவையான வறுத்த கேரட் சூப் தயார்
கேரட் மற்றும் பருப்பு உருண்டைகள்
தேவையான பொருட்கள்
துருவிய கேரட் - 2
வேகவைத்த பருப்பு - 1 கப்
ஓட்ஸ் - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - 1
சீரகம் மற்றும் கொத்தமல்லி - தலா 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து உருண்டை போல் உருட்டியே அல்லது கட்லட் போல் தட்டையாகவோ ஆக்கி கொள்ள வேண்டும். இந்த கலவையை, பாத்திரம் ஒன்றில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து சாப்பிடலாம்.
