உருளைக்கிழங்கின் பக்கவிளைவுகள் : அனைவருக்குமே பிடித்தது உருளைக்கிழங்கு, அதை தினமுமே சாப்பிட்டால் என்னவாகும்?
உருளைக்கிழங்கின் பக்கவிளைவுகள் : உருளைக்கிழங்கை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அனைவருக்கும் எப்போது பிடித்த ஒரு காய் என்றால் அது உருளைக்கிழங்குதான். அதை சிபஸ், வறுவல், கிரேவி என எதைச் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவது பெரும்பாலானோருக்குப் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளையும், உருளைக்கிழங்கையும் பிரிக்கவே முடியாது. அவர்கள் தினமும் உருளைக்கிழங்கு செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடித்த ஒன்றுதான். என்னதான் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று என்றாலும், எதுவுமே அதிகரிக்கும்போது, ஆபத்துதான். எனவே தினமும் உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று பாருங்கள்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. அதில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்துக்கள், பொட்டாசியச் சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி 6 சத்துக்களும் அதிகம் உள்ளன. எனினும், நீங்கள் இதை அதிகம் சாப்பிடும்போது அது ஆபத்தை ஏற்படுத்தும். தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பாருங்கள்.
உயர் ரத்த சர்க்கரை
உருளைக்கிழங்குகளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யக்கூடிய தன்மைகொண்டது. குறிப்பாக அதிகம் உருளைக்கிழங்கை சாப்பிடும்போது, அதுவும் வறுவல், மசியல் என பதப்படுத்தப்பட்டதை சாப்பிடும்போது, அது உங்கள் உடலுக்கு உகந்தது அல்ல. இது நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கும் ஆபத்துதான். எனவே உயர் ரத்த சர்க்கரை உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
