Side Effects of Milk : பால் ஒரு சிறந்த உணவுதான், ஆனால் அதை அதிகம் பருகினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பாருங்கள்!
Side Effects of Milk : பால் ஒரு சிறந்த உணவுதான், ஆனால் அதை அதிகம் பருகினால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் ஒரு பானம்தான். குழந்தைகளுக்கு முதல் உணவாகவும், அத்யாவசியமான உணவாகவும் பால் உள்ளது. 40 வயதுக்கு மேல் பெண்கள் பாலை கட்டாயம் பருகவேண்டும். ஏனெனில், அவர்களுக்கு 40 வயதுக்கு பின்னர் ஏற்படும் எலும்பு கோளாறுகளை சரிசெய்ய உதவும்.
பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை பருகவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான கால்சியச் சத்துக்களை பால் மற்றும் பால் பொருட்கள் உங்களுக்கு கொடுக்கின்றன. ஆனால் நீங்கள் அதகளவில் பால் குடித்தால் அதுவே உங்கள் உடலில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகம் பால் உங்கள் உடலில் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமான கோளாறுகள்
அதிகளவில் பால் குடித்தால் அது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் உடல் லாக்டோசை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அது உங்களுக்கு கட்டாயம் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
உங்கள் உடல் லாக்டேஸ் மற்றும் பாலில் உள்ள சர்க்கரையை முழுமையாக செரிக்காவிட்டால் அது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். பால் உள்ளே சென்று தயிராகி செரிக்கும். இதனால் வழக்கமாகவே பால் செரிமானத்தில் தாமதம் ஏற்படும். அதனால்தான் பாலை காலையில் அருந்தக்கூடாது. இரவு உறங்கச் செல்லும் முன் மட்டுமே அருந்த வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. இரவு அது செரிக்க நேரம் இருக்கும்.
முகப்பருக்கள்
அதிகளவில் பால் பருகும்போது, குறிப்பாக கொழுப்பு நிறைந்த பாலை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, முகத்தில் பருக்களை அது ஏற்படுத்துகிறது. அதிகம் பால் பருகும்போது, அதிகம் முகப்பருக்கள் வருவதை கண்கூடாக காண முடியும். பாலில் உள்ள சில ஹார்மோன்கள் உங்கள் உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்கிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள்
அதிகளவில் பாலை பருகும்போது, அது உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வழிவகுக்கிறது. பாலில் கால்சியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கால்சியம் உங்களின் உடலில் எலும்பு உருவாக மிகவும் தேவையான ஒன்றுதான் என்றாலும், அதிகப்படியான கால்சியம் உங்கள் உடலில் சேரும்போது, அது முறையாக வெளியேற்றப்படாமல் விட்டால் சிறுநீரகத்தில் கற்களாக மாறிவிடுகிறது. இதனால் பாலை அளவாக பருகி, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
உடல் எடை அதிகரிப்பு
பாலில் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை நீங்கள் அதிகளவில் உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை கொண்டுவருகிறது. இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. குறிப்பாக சுவை மற்றும் இனிப்பான பால் பானங்களை நீங்கள் அருந்தும்போது, அது உங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்கிறது.
இதய கோளாறுகள்
அதிகம் கொழுப்பு உள்ள பால், உங்கள் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து, உடலில் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக கொழுப்பு நிறைந்த பாலை பருகும்போது, அது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

டாபிக்ஸ்