Side Effects of Heat Waves : தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பஅலை! எத்தனை ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Side Effects Of Heat Waves : தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பஅலை! எத்தனை ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது பாருங்க!

Side Effects of Heat Waves : தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பஅலை! எத்தனை ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது பாருங்க!

Priyadarshini R HT Tamil
Apr 09, 2024 02:13 PM IST

Side Effects of Heat Waves : வழக்கமான வெப்பத்தை விட 1°C வெப்பம் உயர்ந்தால், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வாழும் 8ல் ஒருவர் பெரும்பாலான பகல் நேரங்களில் பணி செய்வது சிரமத்திற்கு உள்ளாகலாம் எனும் கருத்தும் வெளிவந்துள்ளது.

Side Effects of Heat Waves : தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பஅலை! எத்தனை ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது பாருங்க!
Side Effects of Heat Waves : தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பஅலை! எத்தனை ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது பாருங்க!

"Impacts of warming on outdoor worker well-being in the tropics and adaptation options" எனும் தலைப்பில் One Earth Journal என்று ஆய்வு பத்திரிக்கையில், திறந்த வெளியில், வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் 20 சதவீதம் வேலை நேரம், வெப்ப அலை தொடர்ந்தால் பாதிக்கப்படும் எனும் கருத்து வெளியாகிள்ளது.

வழக்கமான வெப்பத்தை விட 1°C வெப்பம் உயர்ந்தால், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வாழும் 8ல் ஒருவர் பெரும்பாலான பகல் நேரங்களில் பணி செய்வது சிரமத்திற்கு உள்ளாகலாம் எனும் கருத்தும் வெளிவந்துள்ளது.

வெப்பஅலையால் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களின் வருமானம் குறைந்து அவர்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்படும் சூழல் உருவாக முடியும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தை (Humid Heat) சமாளிப்பது இன்னமும் கடினம்.

உலர்வெப்பத்தை சமாளிப்பது சற்று எளிது. வெப்பம் அதிகரிக்கும்போது நீர் அதிகம் குடித்தால், ஆவியாதல் மூலம் வெப்பம் தணிந்து உடல்வெப்பம் குறையும்.

காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் (சென்னை போன்ற), ஆவியாதல் குறைந்து, உடம்பின் வெப்பம் தணிவதில் சிக்கல்கள் ஏற்பட முடியும்.

இந்தியாவில் 1901-2018 இடைப்பட்ட காலத்தில், 0.7°C வெப்பம் (சராசரி), பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டால் (முக்கிய காரணம்) உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2017-20 இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 7 உப்பளங்களில், 352 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 90 சதவீதம் தொழிலாளர்கள் வெப்பம் உயர்ந்த சூழலில் இடைவெளி, ஓய்வின்றி அதிக நேரம் வேலை செய்யும் சூழல் உள்ளதாகவும், போதிய இடைவேளை, நீர் அருந்த முடியாத சூழலில், தொழிலாளர்களுக்கு பல்வேறு சிறுநீரக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

7 சதவீதம் தொழிலாளர்களுக்கு, சிறுநீர் வடிகட்டப்பட்டு உற்பத்தியாவது குறைந்துள்ளது (Decreased Glomerular Filtration Rate) என்பது தெரியவந்துள்ளது.

வெப்ப அலையால் சிறுநீர் தொற்று மற்றும் பல்வேறு சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெப்ப வியர்வையின் காரணமாக தோல் நோய்கள் (Fungal Infection) அதிகமான பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.

வெப்பம் அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதால், தசைகளுக்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு, அதிக சோர்வு, மயக்கம் ஏற்படுகிறது.

நீர்சத்து அல்லது உப்புச்சத்து வெப்பத்தால் அதிகம் வெளியாகும்போது அதை ஈடுகட்ட போதிய நீர் பருகவில்லை எனில் சோர்வு அல்லது தளர்வு அல்லது பாதிப்பு அதிகமாகிறது.

British Journal of Obstetrics and Gynecology ஆய்விதழில்,

வெப்ப அலைக்கு உள்ளான கருவுற்ற பெண்கள் மத்தியில், குறைப்பிரசவம் அல்லது குழந்தை இறந்து பிறப்பது 6.1 சதவீதம் எனவும், வெப்ப அலை பாதிக்கப்படாத கருவுற்ற பெண்கள் மத்தியில், பாதிப்பு 2.6 சதவீதம் என உள்ளதாகவும், குழந்தை எடை குறைவாக பிறப்பது (Low birth-weight) வெப்ப அலை பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்கள் மத்தியில் 8.4 சதவீதம் எனவும், வெப்ப அலை பாதிக்கப்படாத கருவுற்ற பெண்கள் மத்தியில் அது 4.5 சதவீதம் எனவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெப்ப அலையின்போது தோலுக்கு ரத்தஓட்டம் அதிகம் சென்று, வளரும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும், வேலைப் பளு காரணமாக, உணவு அல்லது நீர் அதிகம் உட்கொள்ள முடியாமல் போவதால் வளரும் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்காமல், பிறக்கும் குழந்தையின் எடை குறைந்தும், பிற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் அக்டோபர், 2023ல் செய்யப்பட்ட ஆய்வில், வெப்ப அலைக்கு உள்ளான கருவுற்ற பெண்கள் மத்தியில் கருக்கலைப்பு (Miscarriages) 2 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

வெப்பஅலை அதிகமானால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைக்கு மாறாமல், நிலக்கரி மின்சாரத்தையே நம்பியிருக்கும் போக்கு அதிகமாகிறது.

இந்தியாவில் 70 முதல் 74 சதவீதம் மின்உற்பத்தி நிலக்கரி மின்சாரம் மூலமே பெறப்படுவதால், காற்று மாசுபாடு அதிகமாகி, புவிவெப்பமடைதல் பிரச்சனையும் அதிகமாகி, அதனால் அதிக வெப்பஅலைக்கு உள்ளாகும் சுழலில் (Vicious. Cycle) நாம் மாட்டிக்கொள்வோம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் நாம் தற்போது வரை 20 முதல் 25 சதவீதம் மின்சாரத்தை மட்டுமே பெற்று வருகிறோம்.

வெப்பஅலை தொடர்ந்தால் நிலக்கரி மின்சாரம் மூலமே நாம் அதிக மின்உற்பத்தி செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவோம்.

உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் (Case connected with the survival of endangered Great Indian Bustard Species in Gujarat and Rajasthan) பருவநிலை மாற்றத்திலிருந்து மக்களுக்கான பாதுகாப்பு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்றும், காற்று மாசை ஏற்படுத்தும் நிலக்கரி மின்சாரத்திற்கு பதிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்திக்கு விரைந்து மாறுவது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதோடு, மக்கள் சுகாதாரம் காக்கப்பட்டு, சுகாதாரச் செலவுகளும் கணிசமாகக் குறையும் என தீர்ப்பளித்துள்ளது.

வெப்ப அலையிலிருந்து மக்களைக் காக்க, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க விரைந்து முன்வருமா?

திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களைக் காக்க, சட்ட விதிகளைப் பின்பற்ற தொழிற்நிறுவனங்களுக்கு அரசு அழுத்தம் கொடுத்து அவர்களின் சுகாதாரத்தை பேணிகாக்க முன்வருமா?

நன்றி – மருத்துவர்.புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.