Siddha Remedy : இளமை இதோ இதோ; இனிமை இதோ இதோ! 60திலும் 16 தோற்றம் கொள்ளவேண்டுமா? – மருத்துவர் கூறுவது என்ன?
வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்கவேண்டுமெனில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சித்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.
வயோதிகம்
வயது அதிகமாகும்போது உங்களுக்கு வயோதிக தோற்றம் ஏற்படும். இதனால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது உடல், மன மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்டுவரும்.
உடலுக்கு ஏற்படும் வயோதிகம்
உடலில் செல்கள் இழப்பதால் இந்த வயோதிக தோற்றம் ஏற்படுகிறது. இதனால் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகள் இயங்குவது குறைந்துவிடுகிறது. உடல் சிலவற்றை தானாகவே சரிசெய்யும் உடலின் திறனை குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
சமூக வயோதிகம்
சமூக வயோதிகம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுவது எப்படி என்பதும், அதேபோல், சமூகத்தில் ஒவ்வொருவரின் பங்களிப்பு எவ்வாறு மாறுகிறது என்பதிலும் மாற்றம் ஏற்படுவது சமூக வயோதிகம் எனப்படுகிறது.
வயோதிகத்தால் ஏற்படக்கூடிய வியாதிகள்
புற்றுநோய்
மறதி
நீரிழிவு
இதய கோளாறுகள் ஆகியவை ஆகும்.
எனவே வயது அதிகரிக்கும்போது, நாம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வது அவசியம்.
ஏஜிங் லைக் எ ஃபைன் வைன் என்று கேள்விபட்டிருப்பீர்கள். வயதானாலும் அழகு தோற்றமும், பொலிவும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இளமைத்தோற்றம் நம்மை விட்டு போகக்கூடாது என்ற எண்ணம் அனைவரும் இருக்கும் இயல்பான ஒன்றுதான். அதற்கு நமது உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் சிறப்பாக இருக்கவேண்டும். நீங்கள் உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவேண்டும். மனம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இதையெல்லாம் நீங்கள் சரியாக வைத்துக்கொள்ளும்போது, உங்களின் இளமைத் தோற்றம் உங்களுடனே ஒட்டிக்கொண்டு வாழும். அதையும் கடந்து நீங்கள் இந்த சிறிய விஷயத்தை பின்பற்றினால் போதும். அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுப்பதுடன், உங்களின் இளமைத் தோற்றத்தையும் தக்கவைக்கிறது.
ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பிடித்தது என்றும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பதுதான். யாருக்கும் வயதான தோற்றம் வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருப்பது இயல்புதான். சருமத்தில் சுரக்கம் தெரியக்கூடாது. அதற்கு நீங்கள் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் கட்டாயம் பின்பற்றவேண்டும். அது என்னவென்று சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார். அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அமுக்கரா சூரணம் மாத்திரை
இதில் சுக்கு, மிளகு, திப்பிலி, அமுக்கரா கிழங்கு, கிராம்பு, ஏலக்காய், சிறுநாகப்பூ என இந்த 7 பொருட்களும் கலந்துள்ளது.
திரிபலா சூரணம்
திரிபலா சூரணம் மாத்திரையில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் கலந்துள்ளது.
இந்த 2 மாத்திரைகளையும் வாங்கிகொள்ளவேண்டும்.
6 முதல் 12 வயது உள்ளவர்களுக்கு காலை, மாலை தலா ஒன்றும், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு காலை, மாலை தலா 2 மாத்திரைகளும் சாப்பிடவேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிடலாம். ஆங்கில மருந்துகள் எது சாப்பிட்டாலும், எந்த நோய்க்கு நீங்கள் மருந்து எடுத்தாலும் இந்த மாத்திரைகளை சாப்பிட்டுக்கொள்ளலாம்.
மேலும் இதை தொடர்ந்து நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது, உங்களின் இளமை தோற்றம் தக்கவைக்கப்படும். சருமத்தில சுருக்கம் இருக்காது. இதை கட்டாயம் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்