Siddha Remedy : பசியின்மை, வயிறு உப்புசம், அல்சரா? எடு இந்த 8 பொருளை! - சித்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்க!
Siddha Remedy : பசியின்மை, வயிறு உப்புசம், அல்சர் உள்ளிட்ட வயிறு கோளாறுகளுக்கு உதவும் சூரணம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

Siddha Remedy : திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். அதில் பல்வேறு உபயோகமான சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். வீட்டில் நாம் செய்யக்கூடிய எளிய சிகிச்சைகளாகவும் அவை உள்ளன.
வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் ஏற்படும் புண்களே அல்சர் என்று அழைக்கப்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இதுவே பொதுவான அறிகுறியாகும்.
கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வருகிறது.
டியோடெனல் அல்சர் என்பது உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது.
அல்சரின் அறிகுறிகள்
வயிறு எரிச்சல்
வயிறு வலி
வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு
கொழுப்பு உணவுகளை ஏற்காமை
நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்
வாந்தி
ரத்த வாந்தி,
கருப்பாக மலம் கழித்தல்,
மூச்சுத்திணறல்
மயக்கம்
சோர்வு
வாந்தி
உடல் எடையிழப்பு
பசியின்மை
பசியில் மாற்றம்
எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.
அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.
ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். சிலருக்கு பசியின்மை, வயிற்று வலி, அஜீரண பேதி என எண்ணற்ற பிரச்னைகள் ஏற்படும். அது அல்சராலும் ஏற்படும் அல்சர் இல்லாமலும் ஏற்படும். சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, அல்சர், வயிறு உப்புசம், பசியின்மை, அஜீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு எற்படும். இதற்கு எளிய தீர்வாக இருப்பது ஒன்று மட்டும்தான்.
அஷ்டவர்க்கச் சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், இந்துப்பு, பெருங்காயம் ஆகிய 8 பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். (அஷ்டம் என்றால் 8 என்று பொருள்) சம அளவு எடுத்து இந்துப்பு தவிர அனைத்தையும் தனித்தனியாக பொன் வறுவலாக வறுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அதை ஆறவைத்து பொடி செய்து அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை கால் முதல் ஒரு ஸ்பூன் அளவு சுவைத்து சாப்பிடலாம் அல்லது இளஞ்சூடான தண்ணீரில் கலந்து பருகலாம்.
இதனால் உங்கள் வயிற்றில் அல்சர் போன்ற பெரிய பிரச்னைகள் முதல், அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற சிறிய வயிற்று உபாதைகள் வரை அனைத்தும் காணாமல் போகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். இதை கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கொள்ளலாம். யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
எனவே நீங்கள் இதுபோன்ற சிறிய விஷயங்களை செய்தாலே போதும். நீங்கள் அல்சர் குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. இவற்றை நீங்கள் வீட்டிலேயே எளிதாகவும் செய்ய முடியும். அனைத்து பொருட்களும் சூப்பர் மார்க்கெட்களில் எளிதாக கிடைக்கக் கூடியவை தான்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்