சித்த மருத்துவம் : சர்க்கரையால் உடலில் ஏற்படும் புண்கள் – சித்த மருத்துவர் கூறும் சிறப்பான தைலம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சித்த மருத்துவம் : சர்க்கரையால் உடலில் ஏற்படும் புண்கள் – சித்த மருத்துவர் கூறும் சிறப்பான தைலம்!

சித்த மருத்துவம் : சர்க்கரையால் உடலில் ஏற்படும் புண்கள் – சித்த மருத்துவர் கூறும் சிறப்பான தைலம்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 03, 2025 02:00 PM IST

சித்த மருத்துவம் : சர்க்கரையால் உடலில் ஏற்படும் புண்கள் குணமாக நாட்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும். அதை எளிதில் போக்கக்கூடிய தைலத்தை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும்.

சித்த மருத்துவம் : சர்க்கரையால் உடலில் ஏற்படும் புண்கள் – சித்த மருத்துவர் கூறும் சிறப்பான தைலம்!
சித்த மருத்துவம் : சர்க்கரையால் உடலில் ஏற்படும் புண்கள் – சித்த மருத்துவர் கூறும் சிறப்பான தைலம்!

அவர் இன்று சர்க்கரை நோய் எற்படுத்தும் புண்களில் இருந்து விடுபடும் வழிகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் அந்த புண்ணுக்கு நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய தைலம் குறித்த எளிய தயாரிப்பு முறையை விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

நாள்பட்ட புண்கள் சிலருக்கு இருக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் உடனடியாக ஏற்பட்டுவிடும். நகங்களை வெட்டினாலோ அல்லது லேசாக அடிபட்டாலோ அல்லது நகம் கடித்தாலோ புண்கள் உடனடியாக ஏற்பட்டு, சலம் வைத்து, செப்டிக் ஆகி, காய்ச்சல் வரும் அளவுக்கு இன்ஃபெக்சன் ஆகிவிடும். சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, அழுகும் அளவுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ள நாம் ஒரு எளிய மருந்தை வீட்டிலேயே செய்ய முடியும். இதை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காப்பர் சல்பேட் எனப்படும் மயில் துத்தம் – சிறிதளவு

ஊமத்தை இலைச்சாறு எனப்படும் டட்டூரா மெட்டல் – சிறிதளவு

செய்முறை

இது இரண்டையும் சேர்த்து கலந்தால் திரவ வடிவில் ஒரு தைலம் உருவாகும். இதற்குப் பெயர் மத்தன் தைலம் என்பதாகும். இந்த மத்தன் தைலத்தை நீங்கள் வீட்டிலே வைத்திருந்தால், நீங்கள் அதை புண்ணில் தடவலாம். எந்த வகை புண்கள் ஏற்பட்டாலும் அதில் தடவலாம். சர்க்கரையால் ஏற்பட்ட புண்கள் என்றாலும் அதில் தடவலாம். சர்க்கரை கட்டுக்குள் இருந்தாலும் புண் ஆறவில்லையென்றால் இது உதவும். ஆனால், சர்க்கரை கட்டுக்குள் இல்லாவிட்டால் புண் ஆறாது. எனவே கவனம் தேவை. மற்றபடி எவ்வித புண்களையும் நீங்கள் இதன் மூலம் சரிபடுத்திக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் ஏற்பட்டு, அழுகி விரல் உள்ளிட்ட உறுப்புக்களை நீக்கும் நிலையைப் போக்கலாம்.

இவ்வாறு மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.