Siddha Medicine : பெண்களின் பொதுவான நோய்களும், அதற்கான சித்த மருத்துவ தீர்வுகளும் – மருத்துவர் கூறுவது என்ன?
Siddha Medicine : பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் மற்றும் அவற்றுக்கான சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் காமராஜ் கூறியுள்ளது என்ன?

பெண்களை மிரட்டும் நோய்களில் சர்க்கரை நோய், தைராய்டு நோய், கை, கால், இடுப்பு, மூட்டுவலி நோய், ரத்த சோகை, உடல் பருமன், முடி உதிர்தல், மார்பு கட்டிக், மாதவிடாய், வெள்ளைப்படுதல், கருப்பைக் கட்டிகள் சினைப்பை நீர்க்கட்டி மன அழுத்தம் முசுப்பரு. மலக்கட்டு, தூக்கமின்மை போன்றவை மிகவும் முக்கியமானது ஆகும்.
மேற்கண்ட நோய்கள் வருவதற்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தற்கால உணவுமுறை பழக்கம், உழைக்கும் நோமாற்றம், குடும்ப சூழ்நிலை மற்றும் மன அழுத்தமே ஆகும். இவற்றை சரியாக கையாளத்தெரிந்த பெண்கள் தான் மேற்கண்ட நோய்கள் வராமல் பாதுகாப்பாக உள்ளனர். கையாளத் தெரியாமலும், கடைபிடிக்க முடியாமலும் இருக்கும் பெண்கள் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்து குடும்ப அமைதியை, ஆரோக்கியத்தை, சுய ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு, 100 வருடம் நீண்ட, உடல் ஆரோக்கியத்தை தந்த சிறுதானிய உணவு முறைகளை இனி நாம் பயன்படுத்த வேண்டும். கம்பு, சோளம், கேழ்வாகு, தினை, சாமை, வாகு, கைக்குத்தல் அரிசி, மக்காச்சோளம் போன்றவைகளை முறையாக சமைக்க தெரிந்துகொள்ள வேண்டும். சத்துள்ள இரண்டு வேளை போதுமானது. இதனுடன் ஏதாவது ஒரு கீரை அல்லது காய்களை கூட்டாகவோ, குழம்பாகவோ சமைத்து மேற்கண்ட சிறுதானிய உணவுடன் கலந்து சாப்பிடலாம்.
காய்களில் நாட்டுப்புற காய்களான முருங்கை, அவரை, கொத்தவரை, கத்தரி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், கோவக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் போன்றவைகள் உடலுக்கு ஊட்டம் தரும் மருத்துகள். நால் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
இதுபோல் அனைத்து வகை கிழங்கு வகைகள், பயறு வகைகள், பழ வகைகளும், மனிதர்களுக்கு உயிர்கொடுத்து உடலை வளர்த்து, நீண்ட ஆயுளையும், அழகையும் தரும் அற்புதமான மருந்துகள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அவற்றை தினமும் பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் தினசரி நமக்கு தேவையான வைட்டமின்கள், புரதங்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு சத்துக்கள், இதர உலோக சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதுகுறித்து பெண்கள், முழுமையாக தெரிந்துகொண்டு தொடர்ச்சியாக கடைபிடிக்க தொடங்கிவிட்டால், பெண்களை விரட்டும் நோய்கள் அனைத்தையும் ஓடஓட விரட்டலாம். நோய்கள் வாமலும் தடுக்கலாம்.
மன அழுத்தம் [டிப்ரசன்). மனக்கவலை. தூக்கமின்மை, கோவம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவைகள் வருவதற்கு குடும்ப சூழ்நிலையும், மன அமைதியின்மையுமே காரணம்.
இன்றைய கால கட்டத்தில் ஒருவர் வருமானம் பத்தாது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே ஓரளவு கடன் இல்லாமல் குடும்பம் நடத்த முடியும். குழந்தைகளை படிக்கவைக்க முடியும். வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, குடிகாா கணவன், சரியில்லாத மாமனார், மாமியார், கருத்து வேறுபாடு தனிக்குடித்தனம் இவை எல்லாம் தான் பெண்களை சூழ்ந்து கொண்ட புயல், நோய்.
இவற்றிலிருந்து விடுபட வேண்டுமானால் அனைவரிடத்திலும் நல்ல புரிதல் வேண்டும். பொறுமை வேண்டும், சகிப்புத்தன்மை வேண்டும். சமாளிப்பு வேண்டும். மன்னிக்கின்ற மனமும், போதும் என்ற குணமும் வேண்டும்.
பெண்களின் அழகை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் இளமையுடன் அழகாக இருக்க தினமும் இரண்டு நெல்லிக்காய் எடுத்து விதையை நீக்கி, பின் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து 100 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைந்து, வடிகட்டி அதனுடன் 4 ஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர இளமையும், அழகும் கூட வரும்.
தனி திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) 5 கிராமை இளம் வெந்நீரில் கலந்து இரவு படுக்க போகும் சமயம் தொடர்ந்து சாப்பிட்டு வர இளமை தொடரும்.
திரிபலா பொடி இரண்டு கிராமை தேன் வேண்டிய மட்டும் சேர்த்து, குழைத்து காலை, இரவு உணவுக்கு பிறகு சப்பிட்டு வர உடல் உறுதியாகும்.
வயிறு, தொப்பை குறைய
வயிறு தொப்பை குறைய தினமும்உணவாக வாழைத்தண்டு, வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் 3 நாள் கொள்ளு ரசத்தை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். உணவிற்குப் பிறகு தேன் கலந்து தண்ணீர் பருக கருப்பை நோய்கள், ரத்த சோகை, தோல் நோய்கள், நீங்கும். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர வயிறு தொப்பை, உடல்பருமன், ரத்த கொழுப்பு குறையும். அப்பளம், ஊறுகாய், வத்தல் சாப்பிடக் கூடாது.
பொன்னாங்கள்ணி கீரையுடன் துவரம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து கடைந்து வாரம் 3 அல்லது நாட்கள் தொடர்ந்து சாப்பிட உடல் பருமன், ஊளைச்சதை குறையும்.
வெண்தாமரைப்பூ, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி, இம்முன்றும் சம எடை எடுத்து [2 கிராம் வீதம்] பாலில் இரவு குடிக்கலாம். காலை இஞ்சிசாறு + தேன் சாப்பிடலாம். இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம், நெல்லி உடல் பருமனைக் குறைக்கும்.
இடுப்பு வலி மூட்டு வலி தீர
அமுக்கரா சூரணம் 2 கிராம் எடுத்து, தேன் அல்லது பாலில் கலந்து காலை, இரவு ஆகாரத்திற்கு பின்னர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களின் கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, உடல் அசதி, சோர்வு நீங்கி பலம் தரும்.

தொடர்புடையை செய்திகள்