சித்த மருத்துவ தீர்வு : மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி; மருந்தில்லா மருத்துவம்! டாக்டர் சொல்றத கேளுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சித்த மருத்துவ தீர்வு : மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி; மருந்தில்லா மருத்துவம்! டாக்டர் சொல்றத கேளுங்க!

சித்த மருத்துவ தீர்வு : மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி; மருந்தில்லா மருத்துவம்! டாக்டர் சொல்றத கேளுங்க!

Priyadarshini R HT Tamil
Published Mar 04, 2025 08:00 AM IST

சித்த மருத்துவ தீர்வு : மூட்டு வலிக்கு கொடுக்கப்படும் எளிய தீர்வுகளாக நீங்கள் வீட்டிலேயே சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சித்த மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார்.

சித்த மருத்துவ தீர்வு : மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி; வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய விஷயங்கள் என்ன? மருத்துவர் விளக்கம்!
சித்த மருத்துவ தீர்வு : மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி; வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய விஷயங்கள் என்ன? மருத்துவர் விளக்கம்!

வீட்டில் நாம் செய்யக்கூடிய இந்த எளிய விஷயங்களே போதும். மூட்டுவலியை அடித்து விரட்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுவது என்ன?

மூட்டு வலியால் அவதியா? சித்த மருத்துவர் கூறும் எளிய தீர்வுகள் என்ன பாருங்க; வீட்டிலே செய்யலாம்!

மூட்டு வலிகள் இல்லாதவர்களே கிடையாது எனுமளவுக்கு அதிகம் பேர் மூட்டுவலிகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் இந்த எளிய விஷயங்களை வீட்டிலேயே செய்ய முடியும். அவை என்னவென்று பாருங்கள்.

மூட்டு வலியைப் போக்கும் எளிய தீர்வுகள்

• வாரத்திற்கு ஒரு நாள் உளுந்தங்கஞ்சி செய்து அன்றாடம் பருகவேண்டும்.

• வாரத்திற்கு ஒரு நாள் பிரண்டை துவையல் வைத்து சாப்பிடவேண்டும்.

• வாரத்திற்கு ஒரு நாள் முடக்கத்தான் சூப்பு வைத்து பருகவேண்டும்.

• வாரத்திற்கு ஒரு நாள் வாதமடக்கி இலை துவையல் மற்றும் ரசம் வைத்து சாப்பிடவேண்டும்.

• முருங்கைக்கீரையை காம்பு மற்றும் பூவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து கறிவேப்பிலையையும் காம்புடன் எடுத்துக்கொள்ளவேண்டும். இவையிரண்டையும் சூப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.

• தினமும் இரண்டு வேலைகள் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்.

• வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

இவற்றுடன் சத்தான உணவுகள், கீரை, காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, பயறுகள் என சாப்பிடவேண்டும்.

குறிப்பாக கொள்ளு பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதை கொள்ளு ரசம், துவையல், கொள்ளு கஞ்சி என சாப்பிடலாம்.

இதை நீங்கள் சாப்பிடும்போது வைட்டமின் டி குறைபாடு அதாவது கால்சியச் சத்துக்கள் குறைபாட்டால் வரக்கூடிய மூட்டு வலிகள் காணாமல் போய்விடும். சத்துக்குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலிகளைப் போக்கிவிடும்.

இவ்வாறு சித்த மருத்துவர் காமராஜ் கூறினார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.