சித்த மருத்துவ குறிப்புகள் : கோடைக் காலத்தில் பூத்துக்குலுங்கும் செல்வம்; இதன் மருத்துவ குணங்கள்? – மருத்துவர் விளக்கம்!
சித்த மருத்துவ குறிப்புகள் : கோடை காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம்பூக்களில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகளைக் கொடுக்கிறது பாருங்கள்.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப்பக்களின் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். மக்களுக்கு பயனுள்ள இந்த குறிப்புக்களை வழங்கி வருவதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
அவர் இன்று வேப்பம் பூக்கள் குறித்து குறிபிட்டுள்ளார். அதன் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கிய அவர்கள் அதை மக்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இங்கு கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புக்களை பின்பற்றுவதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.
இதுகுறித்து சித்த மருத்துவர் காமராஜ் கூறியுள்ளதாவது
வேப்பம்பூக்களின் நற்குணங்கள்
தற்போது வேப்ப மரங்களில் கேட்பாரற்று பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இது அற்புதமான மூலிகையாகும். மரங்களில் உள்ள வேப்பம்பூக்களை சேகரித்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்.
வேப்பம் பூக்களை நிழலில் உலர்த்தி ரசம் வைத்து சாப்பிடலாம். வேப்பம் பூவை நெய்யில் பொரித்து சாப்பிடலாம். வேப்பம் பூக்கள் மற்றும் முருங்கைப் பூக்கள் இரண்டையுமே நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்து சாப்பிட சுவையான இருப்பதுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.
சூரணம் செய்வது எப்படி?
வேப்பம் பூக்களை சேகரித்து, நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், சரும நோயாளிகள் மற்றும் நாள்பட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தீராத நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட அவர்களின் நோய்கள் குணமாகும்.
நோயாளிகள் எப்படி பயன்படுத்தலாம்?
சர்க்கரை நோயாளிகள் இந்தப்பொடியை இரண்டு முதல் 4 கிராம் அளவு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். உணவுக்கு முன்னர் சாப்பிடுவது நல்லது.
மூட்டு வலி உள்ளவர்களும் இதை சூடான தண்ணீரில் கலந்து ஆகாரத்துக்கு பின்னர் பருகுவது நல்லது.
சரும நோயாளிகள் சூடான தண்ணீர் அல்லது தேனுடன் கலந்து ஆகாரத்துக்கு முன்னர் சாப்பிடவேண்டும்.
இதை அளவோடு எடுத்துக்கொண்டால் அந்தந்த நோய்களுக்கு நிவாரண கொடுக்கும். இந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வேப்பம் பூ கசக்காது. இனிக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்