Health: மாப்பிள்ளை சம்பா மாதிரி கண்டிப்பாக மதிய உணவின்போது இந்த அரிசிகளை எடுங்க.. சித்த மருத்துவர் கு.சிவராமன்
Health: அரிசிகளான மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம் அரிசி, கருங்குறுவை அரிசி, கருப்புக்கவனி அரிசி ஆகியவற்றின் சிறப்பினை பற்றி மருத்துவர் கு.சிவராமன் பேசியிருக்கிறார். மேலும், மாப்பிள்ளை சம்பா மாதிரி கண்டிப்பாக மதிய உணவின்போது இந்த அரிசிகளை எடுங்க என சித்த மருத்துவர் கு.சிவராமன் பேட்டியளித்துள்ளார்.

Healthy: கண்டிப்பாக மதிய உணவின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய அரிசிகள் குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக சித்த மருத்துவர் கு.சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் என்னும் யூட்யூப் சேனலில், பாரம்பரிய அரிசிகளான மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம் அரிசி, கருங்குறுவை அரிசி, கருப்புக்கவனி அரிசி ஆகியவற்றின் சிறப்பினை பற்றியும், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இருக்கும் ஆரோக்கியம் குறித்துப் பேசியிருக்கிறார்.
மேலும், அந்த யூட்யூப் சேனலில் மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது, ‘’மாவினை புளிக்க வைப்பது தோசைக்காகவும் ஆப்பத்துக்காவும் மட்டும் கிடையாது. அப்படி மாவினை புளிக்க வைப்பதின் மூலம் லாக்டோபேசில்லஸ் உள்ளிட்ட பல நுண்ணுயிரிகளை உருவாக்குகிறோம். இப்படி ஆப்பிரிக்காவில் சிறுதானியங்களை புளிக்க வைக்கிறாங்க. ஜப்பானியர்கள் ‘கொம்புச்சா’ என்னும் டீயைக் குடிப்பார்கள். அதில் ஒரு ஈஸ்ட்டினை போட்டு புளிக்க வைக்கிறார்கள். புளிக்கவைக்கப்பட்ட உணவு தான் தலைசிறந்தது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி ஒரு தமிழக உணவு தான், இட்லியும் தோசையும். அதுபோல் நாம் எடுக்கும் உணவு தான், நீர் ஆகாரம்.
ஆவாரை கசாயத்தின் நன்மைகள்:
இதுமட்டுமல்ல எளிய கசாயங்கள் எடுக்கணும். கரிசலாங்கண்ணி கசாயம், ஆவாரை கசாயம் எடுக்கணும். ஆவாரைப்பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா என தமிழ்ச்சமூகம் கூறியிருக்கிறது.
எல்லா பருவத்திலும் பூக்கும் ஆவாரை இரத்த சர்க்கரைக்கு மிக நல்லது. இன்றைக்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் சித்தா, டெல்லியில் இருக்கக்கூடிய சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையம் எல்லாம் சொல்கிறது, ஆவாரை கசாயம், ரத்த சர்க்கரை இருப்பவர்கள் தினமும் அருந்தும் மாமருந்து.
சாதாரண டீக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் குடிக்கணும். வாரத்துக்கு ஒரு நாள் இட்லி, தோசை சாப்பிட்டால் போதும். அதற்கு மாற்றாக, என்ன டிஃபன் செய்யலாம் என்றால், காலையில் கொஞ்சம் சுண்டல் எடுத்துக்கலாம். முளைகட்டிய பயிறு, காய்கறிகளை அரைத்த சூப், இரண்டு முட்டை, கொஞ்சம் பாதாம் பருப்பு, கொஞ்சம் நிலக்கடலை எல்லாம் சேர்த்து சாப்பிடும்படி, காலை உணவு இருக்கணும். முட்டை சாப்பிடாதவர்கள், பன்னீர் சாப்பிடலாம்.
இது உணவுக்குப் பின் சாப்பிடுவதா, இல்லை பின்பு சாப்பிடுவதா எனக் கேட்கக் கூடாது. இதுதான், காலை உணவு. பல பேருக்கு இட்லி, தோசை கிடையாது என்றாலே, அயற்சியாக இருக்கும். அப்படியெல்லாம் கிடையாது.
இப்படி காலையில் 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு, அலுவலகத்தில் 11 மணிக்கு பசித்தால், உடம்பு நன்கு இருக்கிறது என்று அர்த்தம். அப்போது ஒரு சிவப்புக் கொய்யா சாப்பிடுங்கள். இல்லையென்றால், கொஞ்சம் ஆப்பிள், கொஞ்சம் பப்பாளித்துண்டு, கொஞ்சம் மாதுளை இப்படி எடுத்துக்கணும். இடையில் ஒரு கப் டீ இல்லையென்றால், ஒரு கப் மோர் குடித்துக்கொள்ளுங்கள்.
மதிய உணவு இப்படி இருக்க வேண்டும் - சித்த மருத்துவர் கு.சிவராமன்!
மதியம் உணவு உண்ணும்போது காய்கறி அதிகம் இருக்க வேண்டும். குறைவான அளவு சோறு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சோறும் சிகப்பு நிறத்தில் உள்ள மாப்பிள்ளைச்சம்பா, காட்டுயானம் அரிசி, கருங்குறுவை அரிசி, கருப்புக்கவனி இப்படியான அரிசியினை வாங்கிக்கொள்ளுங்கள்.
விலை அதிகமாக இருக்கிறது என்று சொல்லாதீர்கள். அதிகம் வாங்கத்தொடங்கினால் அரிசி விலை குறையும். அதன்பின் இருக்கும் மருத்துவ குணங்கள் அதிகம்.
பர்மிய மன்னர்களும், சீன மற்றும் திபெத்திய மன்னர்களும் சாப்பிட அனுமதிக்கப்பட்ட அரிசி, கவுனி அரிசி. இன்றைக்கு ஒடிசாவில் கட்டாக்கில் இருக்கும் தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில், கவுனி அரிசியில் இருக்கும் கறுப்பு நிறத்துக்கு ஆந்தோ சயனின் இருப்பதே காரணம் என அறிகின்றனர்.
அந்த ஆந்தோ சயனின் புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாகவும் இருக்கிறது. மாப்பிள்ளை சம்பா அரிசியில் சிவப்புத்தன்மைக்கு காரணமாக இருப்பது, லைகோபின். இது ஆண்களின் வயதுமுதிர்வின்போது வரும் புராஸ்டெட் புற்றுநோயை வராமல் தடுக்க லைகோபின் பயன்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்’’ என சித்த மருத்துவர் கு. சிவராமன் கூறியுள்ளார்.
நன்றி: தமிழ் ஸ்பீச் பாக்ஸ்!

டாபிக்ஸ்