இளநரை மாறவேண்டும்; நரை முடி இருக்கக் கூடாது; முடி உதிர்வைத் தடுக்கணுமா – மருத்துவர் கூறுவது என்ன?
இளநரை மாற, நரைமுடி போக, முடி உதிர்வைத் தடுக்க சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வு குறித்து மருத்துவர் விளக்குகிறார்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
இளநரையால் அவதிப்படுகிறீர்களா? நரைமுடி வரக்கூடாது என்று விரும்புகிறீர்களா? முடி உதிர்வைக் குறைக்கவேண்டுமா? இந்த மூன்று இருந்தால் போதும் என்று திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார். இந்த பிரச்னைகளுக்கான தீர்வை அவர், தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார். அது என்னவென்று பாருங்கள்.
கருகருவென முடி நீண்டு வளரவேண்டும். முடி உதிரக்கூடாது. நரை முடி வரக்கூடாது. இளநரை மறைய வேண்டும். நரை வரக்கூடாது என்றால் என்ன செய்யவேண்டும் என்று அவர் கூறுவதைக் கேளுங்கள்.
தேவையான பொருட்கள்
செய்முறை
கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி இந்த மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை நிழலில் உலர்த்தி நன்றாக காயவிடவேண்டும். காய்ந்தவற்றை இடித்து பொடி செய்துகொள்ளவேண்டும்.
மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலையில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் அதிகம் விட்டு அதில் குழைத்து, ஆகாரத்துக்குப்பின்னர் அல்லது ஆகாரத்துக்கு முன்னர் சாப்பிடவேண்டும்.
இதை தொடர்ந்து சாப்பிட்டு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சாப்பிட்டு வந்தால், இளநரை வராது, முடி உதிர்வு குறையும், நரை முடி உதிராது, நீண்டு வளரும். கண் பார்வை நன்றாக இருக்கும். ரத்தசோகை குணமாகும். உடல் புத்துணர்வுடன் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் இது உங்களுக்கு கட்டாயம் உதவும்.
பொறுப்பு துறப்பு
நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்