‘சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்’ இன்று நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க சில ஜோக்குகள்!
நீங்கள் மனம் விட்டு சிரிக்க இன்று எத்தனை ஜோக்குகள் பாருங்கள்.
இந்த உலகத்துலேயே அதிக பலசாலியான விலங்கு எலிதான், ஏன் தெரியுமா?
ஏன்னா, அது பிள்ளையாரையே தாங்குதே, அதான். ஹாஹாஹா!
ஒரு ரவுடி எப்போதும் எதையாவது கடத்துவானாம், காசு கெடக்குமாம். ஆனா நேத்து ஒன்ன கடத்துனானாம், காசே கெடக்கலையாம். அது என்ன?
வேற என்ன, நேரத்த கடத்துனானாம். காசு கெடக்கலையாம். ஹாஹாஹா!
காபியவிட டீதான் பெட்டர் ஏன்?
ஏன்னா டீல ஒரு ஈ தான் இருக்கு. ஆனா காபில இரண்டு ஈ இருக்கு. அதான். ஹாஹாஹா!
மீனுக்குப் பிடிக்காத டே எது?
வேற என்ன டே ஃப்ரை டேதான். ஹாஹாஹா!
நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்?
பனியன். ஹாஹாஹா!
இனிஷியல் உள்ள மிருகம் எது?
ஓநாய்தான் வேற எது, ஹாஹாஹா!
இந்த ஒரு ஓட்டல்ல மட்டும் எந்த சாப்பாடும் சூடாகவே இருக்காது. அது எந்த ஓட்டல்?
ஆரியபவன், ஹாஹாஹா!
நாம் ஏன் படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுகிட்டே தூங்குனா விழுந்துடுவோம். ஹாஹாஹா!
எலுமிச்சை பழம் ஆணா இல்லை பெண்ணா?
ஆண்தான், அதை பிழிஞ்சா சார் வருதுல்ல.
கசப்பே இல்லாத மொழி எது?
வேற எது? தேன் மொழிதான். ஹாஹாஹா!
மேட் இன் ஜப்பான் என்பதற்கு எதிர்பதம் என்ன?
பள்ளம் இன் ஜப்பான் தான். ஹாஹாஹா!
டாக்டருக்கும், ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க. ஹாஹாஹா!
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசில காச கரியாக்குவாங்க, நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க. ஹாஹாஹா!
FILES க்கும் PILES க்கும் என்ன வித்தியாசம்?
FILES அ உட்கார்ந்து பார்க்கணும், PILES க்கு பார்த்து உட்காரணும். ஹாஹாஹா!
செல்போனுக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது, செல்போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஹாஹாஹா!
ஒவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?
மதிப்பெண்ணும், மதிக்காத பெண்ணும். ஹாஹாஹா!
வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான், வசதி உள்ளவன் நாய்
மேய்க்கிறான் ஹாஹாஹா!
ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?
வேறென்ன ஒன்னு ஃபிகர், ரெண்டாவது சுகர். ஹாஹாஹா!
என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது, பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும், சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.
கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்?
கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும், எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும். ஹாஹாஹா!
மனம் விட்டு சிரியுங்கள். மகிழ்ச்சியாக சிரியுங்கள்!
அத்தனை ஜோக்குகளும் படித்து மனம் விட்டு சிரித்தீர்களா? சிரித்தது போதும். இனி சிந்தனை நேரம். இன்று உங்கள் சிந்தனைக்கு இந்த வரிகள் உதவும்.
இப்போதே செய்து முடியுங்கள், சில நேரங்களில் பின்னர் என்பது இல்லாமல் கூட போகலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்