Sharp your Vision : கண் பார்வையை கூராக்கும் காய்கறிகள் இவைதான்! இயற்கையின் பொக்கிஷங்கள் என்ன?
- Sharp your Vision : கண் பார்வையை கூராக்கும் காய்கறிகள் இவைதான்! இயற்கையின் பொக்கிஷங்கள் என்ன?
- Sharp your Vision : கண் பார்வையை கூராக்கும் காய்கறிகள் இவைதான்! இயற்கையின் பொக்கிஷங்கள் என்ன?
(1 / 10)
உணவிலே உங்கள் கண் பார்வையை கூராக்குங்கள் - உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க கண் பார்வைத்திறன் உங்களுக்கு நன்றாக இருக்கவேண்டும். உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் கண் பார்வையை கூராக்க குறிப்பிட்ட சில காய்கறிகள் மிகவும் முக்கியம். அதில் உள்ள அதிகளவிலான வைட்டமின்கள் மறறும் மினரல்கள் உங்கள் கண் பார்வையை கூராக்க உதவுபவை. உங்கள் கண் பார்வைத்திறனை அதிகரிக்கவேண்டுமெனில், அதற்கு இயற்கை முறையில் உதவக்கூடிய காய்கறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 10)
கேரட் - கேரட்டில் அதிகளவில் பீட்டா கரோட்டின்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைத்திறனை அதிகரிக்க மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்துக்கு நல்லது.
(3 / 10)
கீரை - கேரட்டில் லூயூடின் மற்றும் சியாக்ஸியான்தின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது கண்களின் ரெட்டினா ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கண்களை கூசச்செய்யும் விளக்கு ஒளியில் இருந்து காக்கிறது. நாள்பட்ட கண் நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கண் கேட்ராக்ட்கள் மற்றும் மாக்குலர் டீஜெனரேசன் ஆகியவற்றை தடுக்கிறது.
(4 / 10)
பரட்டைக்கீரை என்று அழைக்கப்படும் காலே - காலேவில் வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துக்கள் உள்ளது. இதிலும் லியூட்டின்கள் மற்றும் சியாக்ஸியான்தின்கள் உள்ளது. இது ரெட்டினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கண்களுக்கு தீங்கு விளைக்கும் ஊதா நிற வெளிச்சத்தில் இருந்து கண்களை காக்கிறது. இது கண்களில் கேட்ராக்ட் ஏற்படாமலும், மாக்குலர் டீஜெனரேசன் வராமலும் தடுக்கிறது.
(5 / 10)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகளவில் பீட்டா கரோட்டின்களும் வைட்டமின் இயும் உள்ளது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாத்து, உங்களின் இரவு நேர கண் பார்வைத்திறனை கூர்மையாக்குகிறது.
(6 / 10)
சிவப்பு குடை மிளகாய் - சிவப்பு குடை மிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது உங்கள் கண்களில் உள்ள ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கண்களில் கேட்ராக்ட்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். மேலும் வைட்டமின் ஏ சத்துக்கள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
(7 / 10)
ப்ரோக்கோலி - ப்ரோகோலியில் வைட்டமின் சி சத்துக்கள், பீட்டா கரோட்டின்கள், லியூடின் மற்றும் சியாக்ஸியான்தின்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் கண்களை பாதுகாக்க உதவும். இதனால் உங்களுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாது. வயோதிகம் தொடர்பான கண் பிரச்னைகளை இது குறைக்கிறது.
(8 / 10)
மரக்கோஸ் எனப்படும் ப்ருசெல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் - முட்டைகோஸ் போலேவே தோற்றம் இருந்தாலும், இது அதைவிட சிறியது. இதில் அதிகளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே சத்துக்கள் உள்ளது. இதிலும் லியூட்டின் மற்றும் சியாக்ஸியான்தின் உள்ளது. இது கண்ணை ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து காக்கிறது. மேலும் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
(9 / 10)
பரங்கிக்காய் - பரங்கிக்காயில் பீட்டா கரோட்டின்கள் உள்ளது. அதுதவிர வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளன. பரங்கிக்காய் பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வயோதிகம் தொடர்பான கண் நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்